விஜய் தொலைக்காட்சிகள் நீண்ட காலமாக ஒளிபரப்பப்பட்டு வரும் நாடகம்தான் பாரதி கண்ணம்மா அந்த நாடகத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரங்களும் மக்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்தவை ஆகும், கதாபாத்திரங்கள் மட்டுமல்ல அந்த கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகளும் ஆவர்.
பாரதி கண்ணம்மா நாடகத்தில் முக்கிய கதாபாத்திரமாக விளங்குவது கண்ணமா ஆகும், இந்த கதாபாத்திரத்தில் நடிக்கும் ரோஷினி ஹரிப்ரியன் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர், இந்த நாடகத்திற்கு முன்பு இவர் எள்ளளவு கூட தமிழ்நாட்டு மக்களால் அறியப்படாதவர் ஆவார். இந்த நாடகத்தில் வாய்ப்பு கிடைத்த பிறகு தன்னுடைய முழு திறமையும் வெளிப்படுத்தி தன்னை தமிழ் மக்களுக்கு அறிமுகப்படுத்திக் கொண்டு நீங்காத இடத்தையும் பிடித்துள்ளார்.
மேலும் இவருக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது, இந்த நாடகத்தில் வந்த ஒரு சில காட்சிகளை வைத்து இந்த நாடகத்தை மீம் கிரியேட்டர்கள் ஒரு காலத்தில் வச்சி செய்தார்கள். மக்கள் இந்த நாடகம் எப்பொழுது முடியும் என்ன முடிவு என்ற ஆர்வத்துடன், இந்த நாடகம் முடியாது போல என்று பெருமூச்சு விடுகின்றனர்.
1992ஆம் ஆண்டு பிறந்த இவர் எத்திராஜ் மகளிர் கல்லூரியில் ஹியூமன் பயாலஜி என்ற பட்டப்படிப்பை முடித்துள்ளார், இவர் எப்பொழுதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளுள் ஒருவர் ஆவார். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய புகைப்படங்களை தொடர்ந்து வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
இவ்வாறு ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைய தொடங்கினால் அனைத்து நடிகைகளும் சோசியல் மீடியாவில் தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள் அந்த வகையில் ரோஷ்னி ஹரிபிரியனும் தற்பொழுது தாவணி பாவாடையில் மிக அழகாக நடனமாட வீடியோவை வெளியிட்டுள்ளார்.இதோ அந்த வீடியோ.