Bigg-Boss-Day1-Promo1

வாத்தி கம்மிங் பாடலோடு தொடங்கியது பிக்பாஸ் சீசன் 4 முதல் ப்ரமோ வீடியோ!!

vijay tv biggboss season 4 first promo video viral:விஜய் டிவியில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் 4 நேற்று கோலாகலமாக தொடங்கிய நிலையில் இன்று ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட பிக் பாஸ் சீசன் 4  முதல் நாள் எபிசோடு இனிதாக தொடங்கியது.

இந்த நிகழ்ச்சியில் சின்னத்திரை மற்றும் வெள்ளி திரை பிரபலங்கள் கலந்து கொண்டு தங்களை மேலும் பிரபலபடுத்திக் கொள்வதற்காகவும் மேலும் புதிதாக வருபவர்கள் தங்களை அறிமுகப்படுத்தி அதன் மூலம் பிரபலமாகவும் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ஒரு வாய்ப்பாக உள்ளது.

இந்த பிக்பாஸ் சீசன் 4 ல் நடிகர், நடிகை, சீரியல் நடிகை, பாடகர் தொகுப்பாளர்,  தொகுப்பாளினி, சண்டை பயிற்சியாளர், மாடல், செய்திவாசிப்பாளர் என அனைத்து துறையில் இருந்தும் இந்த போட்டிக்கு கலந்து உள்ளார்கள்.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் ப்ரோமோ வீடியோ ஒவ்வொரு நாளும் மூன்று கட்டமாக வெளியாகும். அந்த வகையில் தற்போது முதல்கட்ட ப்ரோமோ வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முதல் நாள் காலையிலேயே வேக்கிங் பாடல் மாஸ்டர் திரைப்படத்திலிருந்து வாத்தி கம்மிங் பாடல் ஒலிக்க அதற்கு போட்டியாளர்கள் உற்சாகமாக குத்தாட்டம் போடுகின்றனர். முதல் நாளிலேயே விஜய் படத்தின் பாடலை போட்டதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். தற்போது இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.