ram

வீட்டிற்கு சென்ற பிக்பாஸ் ராமை கட்டி அணைத்தும், மலர் தூவியும் வரவேற்ற பிள்ளைகள்.! எமோஷனலாக ராம் வெளியிட்ட வீடியோ இதோ..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர்கள் பலர் உள்ளார்கள் அந்த வகையில் பிக்பாஸ் சீசன் 6வது நிகழ்ச்சி தற்பொழுது மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வந்த நிலையில் தற்போது 65 நாட்களைக் கடந்துள்ளது மேலும் வாரம்தோறும் இந்நிகழ்ச்சியில் இருந்து ஏதாவது ஒரு நபர் வெளியேறி வருகிறார்.

அந்த வகையில் பிக்பாஸ் சீசன் ஆறாவது நிகழ்ச்சியில் பங்குபெற்ற 21 போட்டியாளர்களில் ஒருவராக பங்கு பெற்றவர்தான் ராம். இந்நிகழ்ச்சியில் 62 நாட்கள் வரை தாக்குபிடித்த நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.  மேலும் கடந்த வாரம் ராமை தொடர்ந்து ஆயிஷா இருவரும் அடுத்தடுத்த நாட்களில் வெளியேற்றப்பட்ட நிலையில் இது ரசிகர்கள் மத்தியில் பெரிதும் வருத்தத்தை ஏற்படுத்தியது.

இவ்வாறு பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட ராம் தனது வீட்டிற்கு செல்லும் பொழுது அவருடைய மனைவி மகன் மற்றும் குடும்பத்தினர்கள் அனைவரும் வரவேற்கும் காட்சியின் வீடியோ தற்பொழுது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதோடு மட்டுமல்லாமல் இவருக்கு பலரும் தங்களுடைய வாழ்த்துக்களையும் கூறி வருகிறார்கள்.

அந்த வகையில் முக்கியமாக ராம் ராமசாமியின் செல்ல மகள் அவரை கட்டிப்பிடித்து வரவேற்கும் காட்சிகள் பலரையும் கவர்ந்தது மேலும் தன்னுடைய தந்தைக்கு மகன் மலர்களை தூவி வரவேற்பதை பார்க்கும் பொழுது பலரும் பொறாமைப்படும் அளவிற்கு இருந்தது இந்த வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட இவர் குடும்பத்தை விட பெரியது வேறு எதுவும் இல்லை என்ற கேப்ஷனில் கூறியுள்ளார்.

இவ்வாறு ராம் ராமசாமியின் இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் நிலையில் பலரும் அவருக்கு தங்களுடைய வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள். இந்நிலையில் இந்நிகழ்ச்சிருக்கு பிறகு கண்டிப்பாக ராம் ராமசாமி இதற்கு மேல் திரைப்படங்களில் நடிப்பதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.