தற்பொழுதெல்லாம் தொலைக்காட்சியில் நடித்து வரும் ஏராளமான நடிகைகளுக்கு தொடர்ந்து திரைப்படங்களின் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்து வருகிறது மேலும் சின்னத்திரையில் நடிக்கும் நடிகைகளுக்கு ரசிகர்கள் மத்தியில் விரைவில் நல்ல வரவேற்பு கிடைத்து விடுகிறது.
மேலும் இவர்களுக்கென்று தனி ஒரு ரசிகர்கள் மத்தியில் உருவாகி விடுவதால் இவர்கள் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள் இதன் மூலம் இவர்களுக்கு திரைப்படங்களின் நடிப்பதற்கான வாய்ப்பு எளிதில் கிடைத்து விடுகிறது. அந்த வகையில் சீரியலில் கதாநாயகியாக நடித்துவரும் பலரும் அடுத்தடுத்து திரைப்படங்கள் நடிப்பதற்கு என வாய்ப்பை தேடி செல்கிறார்கள்.
அந்த வகையில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர்தான் ராதிகா ப்ரீத்தி. மாடலிங்காக பணியாற்றி வந்த இவர் கன்னடத்தில் சில சீரியல்களில் நடித்து வந்தார் இதன் மூலம் இவருக்கு தமிழில் பூவே உனக்காக சீரியலில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. சீரியலில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்துகிறார்.
இந்த சீரியல் சில மாதங்களுக்கு முன்பு தான் நிறைவடைந்தது. அதாவது இவர் சீரியலின் அடிப்பதற்கு முன்பு கன்னடத்தில் ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார். ஆனால் அதில் எந்த படம் ராதிகா பிரீத்திக்கு பெரிதாக பிரபலத்தை தராத காரணத்தினால் கடந்த 2019ஆம் ஆண்டு தமிழில் தயாரான நாதிரு தின்னா என்ற படத்தில் தவிர்க்க முடியாத சில காரணத்தினால் கிடைப்பில் போடப்பட்டுள்ளது.
இப்படிப்பட்ட நிலையில் பூவே உனக்காக சீரியலின் மூலம் ரசிகர்கள் மத்தியில் இவர் பிரபலமடைந்ததால் இத்திரைப்படம் வெளி வருவதற்கான முயற்சிகள் மேற்கொண்டு வருவதாகவும் மேலும் திரைப்படம் வெற்றி பெற்றால் தொடர்ந்து திரைப்படங்கள் நடிப்பதற்கான வாய்ப்பை பெறுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது இந்நிலையில் நாதிரு தின்னா திரைப்படத்தின் ப்ரோமோ தற்பொழுது வெளியாகிவுள்ளது.