phycho

வசனமே இல்லாமல் இளையராஜாவின் இசையில் திகில் கிளப்பும் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள சைக்கோ ட்ரைலர்.

இயக்குனர் மிஸ்கின் சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, யுத்தம் செய், துப்பரிவாளன் ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து தற்போது சைக்கோ திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ளார் அது மட்டுமில்லாமல் ஒரு மாற்றுத் திறனாளியாக பார்வையற்றவராக நடித்துள்ளார்.

மேலும் இந்த திரைப்படத்தில் இயக்குனர் ராம், நித்யா மேனன், அதிதிராவ் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார் அதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது.

இதற்கு முன் வெளியாகிய உன்ன நெனச்சு, நீங்க முடியுமா ஆகிய பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த ட்ரெய்லரில் கொடூர கொலைகளை செய்யும் சைக்கோ பார்வையற்ற மாற்றுத்திறனாளியாக உதயநிதிஸ்டாலின் என எந்த கதாபாத்திரத்திற்கும் வசனங்களே இல்லை.

ட்ரெய்லர் முழுவதும் இசையிலேயே கதை சொல்லியுள்ளார் மிஸ்கின்.