ரசிகர்கள் பலரும் தமிழ் சினிமாவை விரும்புவதுபோல் ஹாலிவுட் திரைப்படத்தையும் வெகுவாக விரும்பி பார்க்கிறார்கள். அந்த வகையில் திரில்லர் கலந்த ஹாலிவுட் திரைப்படம் என்றால் சொல்லவே தேவையில்லை அந்த அளவு ரசிகர்களுக்கு மிகவும் பிடித்து விட்டது. அந்த வகையில் திகில் கலந்த திரில்லர் திரைப்படம் என்றால் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெறுகிறது.
அப்படி ஹாலிவுட் சினிமாவில் திரில்லர் திரைப்படங்களை கொடுப்பதில் வல்லவர் ஜேம்ஸ் வேன். இவர் இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் கதை ஆசிரியராகவும் சினிமாவில் தனது பணியை தொடர்ந்து வருகிறார். ஜேம்ஸ் வேன் இயக்கிய திரைப்படங்களும் கதை எழுதிய திரைப்படங்களும் நெஞ்சை பதபதைக்க வைக்கும் அந்தளவு திகில் கலந்த திரைப்படமாக உருவாகியுள்ளது.
அந்த வரிசையில் சா சீரியஸ், இன்சிடியஸ், காஞ்சுரிங் சீரியஸ் என பல திகில் கலந்த திரைப்படங்களை கொடுத்துள்ளார். அதிலும் காஞ்சுரிங் சீரியஸ் ரசிகர்கள் பயப்பட வைத்தது. இந்த நிலையில் காஞ்சுரிங் மூன்றாவது பாகம் இயக்கி உள்ளார்கள் இந்த திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.
ஜேம்ஸ் வேன் கதை எழுதி தயாரிக்கும் இந்த திரைப்படத்தை பீட்டர் சாப்ரான் இணைந்து தயாரிக்கிறார் ஜான்சன் மற்றும் மெக்கொலிட்ரிக் இணைந்து திரைக்கதை எழுத மைக்கல் சாவேஸ் படத்தை இயக்கியுள்ளார்.
இந்த திரைப்படம் அமானுஷ்ய சக்திகளையும் ஆவிகளையும் மையப்படுத்தி கதை உருவாக்கப்பட்டுள்ளது அதேபோல் காஞ்சுரிங் திரைப்படம் அமெரிக்காவில் நடைபெற்ற ஒரு வழக்கை தழுவி திகிலாக எடுக்கப்பட்டுள்ளது இந்த திரைபடத்திற்கு இந்த காஞ்சுரிங் திரைப்படத்திற்கு THE CONJURING- THE DEVIL MADE ME TO DO IT பெயர் வைக்கப்பட்டுள்ளது இந்த திரைப்படத்தில் இருந்து ஒரு சில காட்சிகள் யூடியூபில் வெளியாகி உள்ளது இந்த காட்சி திகிலூட்டும் படி அமைந்துள்ளது.