pistha

காமெடி கலாட்டா நிறைந்த பிஸ்தா படத்தின் 2வது டீசர் இதோ.!

தற்பொழுது தொடர்ந்து ஏராளமான முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகி வரும் நிலையில் மெட்ரோ படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்த நடிகர் க்ரிஷ் தற்பொழுது புதிய திரைப்படம் ஒன்றில் நடித்து வருகிறார். காமடி கலாட்டா நிறைந்த இந்த திரைப்படத்திற்கு பிஸ்தா என பெயர் வைத்துள்ளார்கள் மேலும் இந்த படத்தில் மிர்துளா முரளி கதாநாயகியாக நடித்த வருகிறார்.

இவரைத் தொடர்ந்து அருந்ததி நாயகர், சதீஷ், பிரபல காமெடி நடிகர் செந்தில், யோகி பாபு போன்ற காமெடி பட்டாளமே இணைந்து நடிக்கிறது மேலும் இந்த படத்தினை எம் ரமேஷ் பாரதி எழுதி இயக்குகிறார். இவ்வாறு காமெடி கலாட்டா நிறைந்த படத்தினை ஒன் மேன் புரொடக்சன் நிறுவனத்தின் சார்பாக புவனேஸ்வரி சம்பாசிவம் தயாரிக்கிறார் எம் விஜய் ஒளிப்பதிவு செய்கிறார்.

தரன் குமார் இந்த படத்திற்கு இசையமைக்க இயக்குனர் ரமேஷ் பாரதி, யுக பாரதி, ஆர் கே விஜய் ஆகியோர்கள் பாடல் வரி எழுதியுள்ளார்கள் சமீபத்தில் தான் இந்த படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது இப்படிப்பட்ட நிலையில் தற்போது இந்த படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது.

அந்த டீசரில் கல்யாணமாகும் மாப்பிள்ளை பெண் யார் என தெரியாமலேயே திருமணத்திற்கு தயாராகிறார் மேலும் அனைவரும் அந்த மணப்பெண்ணிற்காக மிகவும் ஆர்வமுடன் காத்து வருகிறார்கள் இவ்வாறு இந்த டீச்சரை பார்க்கும்பொழுது முழுக்க முழுக்க காமெடி படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.