தற்பொழுதெல்லாம் வெள்ளித்திரை நடிகர், நடிகைகளை விடவும் சின்னத்திரை நடிகர்,நடிகைகளுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அதோடு மட்டுமல்லாமல் சீரியல்களில் நடிப்பதன் மூலம் எளிதில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகிறார்கள். இதில் சில நடிகர்கள் தங்களது உயிரை கொடுத்து தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வருபவர்களும் இருக்கிறார்கள்.
இவ்வாறு அவர்கள் தங்களது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வருவதால் அவர்களின் உண்மையான பெயர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடையவில்லை அந்த கேரக்டரின் பெயர்தான் ரசிகர்களின் மனதில் பதிந்து விடுகிறது. இதன் காரணமாக அந்த நடிகர், நடிகைகளை எங்கு பார்த்தாலும் அந்த சீரியலில் அவர் நடிக்கும் கேரக்டரின் பெயரை சொல்லி அழைப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.
இப்படிப்பட்ட நிலையில் தொடர்ந்து ஏராளமான சீரியல்களை அறிமுகப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்துள்ள தொலைக்காட்சி தான் விஜய் டிவி. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் முதல் சீசன் வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது சீசனையும் சமீபத்தில் அறிமுகப்படுத்தி மிகவும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் தான் ஈரமான ரோஜாவே 2.
இந்த சீரியலில் நடித்து வரும் அனைத்து கேரக்டர்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் முக்கியமாக ஜீவா மற்றும் பிரியா இவர்களுடைய கேரக்டர் ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்துள்ளது. மேலும் சமீப காலங்களாக இவர்களுக்கிடையே ரொமான்ஸ் நடப்பதை பார்த்த ரசிகர்கள் வெட்கமாக இருப்பதாகவும்,கியூட் பேர் எனவும் கூறி வருகிறார்கள்.
இப்படிப்பட்ட நிலையின் தற்பொழுது ஜீவா மற்றும் பார்த்திபன் ஆகியோர்களின் அம்மாவாகவும் காவியா மற்றும் பிரியாவிற்கு அத்தையாகவும் நடித்து வரும் நடிகை தான் மீனா வேமுரி. இவரின் கேரக்டருக்கும் சமீப காலங்களாக முக்கியத்துவம் இருந்து வருகிறது. மீனா வெமுரி தனது இன்ஸ்டாகிராமில் நடந்த மாடி வெளியிட்ட வீடியோ ரசிகர்கள் மத்தியில் பெரிதும் அதிர்ச்சியை ஏற்படுத்திவுள்ளது. இது ஜீவாவின் அம்மா தானா.? என கேள்வி எழுப்பி வருகிறார்கள். இதோ அந்த வீடியோ.