vijay

ஆள் ஏரியா அய்யா கில்லிடா என நிருபித்த விஜய்.! வீடியோவை பார்த்து மிரளும் ரசிகர்கள்

விஜய் தற்பொழுது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற இருக்கிறது.

மேலும் இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த டீசர் தற்போது வரை ட்ரெண்டிங்கில் இருந்துவருகிறது அதுமட்டுமல்லாமல் 40 மில்லியன் பார்வையாளர்களை பார்க்க வைத்து சாதனையும் படைத்திருக்கிறது. இந்த திரைப்படத்தில் நடிகை மாளவிகா மோகன், ஸ்ரீநாத், ஸ்ரீமன், சஞ்சீவ், விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், ஆண்ட்ரியா, மகேந்திரன், சாந்தனு போன்ற பல நட்சத்திரங்கள் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளார்கள்.

இந்தப்படத்தின் டீசரில் மகேந்திரனும் இருக்கிறார் ஆனால் ரசிகர்கள் கண்களுக்கு தெரியவில்லை சில ரசிகர்கள் மகேந்திரன் இருப்பதை பார்த்து விட்டார்கள்.

இந்த டீசருக்கு விஜய் ரசிகர்கள் மட்டும் டான்ஸ் ஆடுவது மட்டுமல்லாமல் வெளிநாட்டிலுள்ள நபர்களும் இந்த டீசரை பார்த்து டான்ஸ் ஆடுகிறார்கள்.

அப்படி வெளிநாட்டு இரண்டு நபர்கள் மாஸ்டர் டீசருக்கு ஏற்ப ஆடி உள்ளார்கள் இந்த பதிவை தனது சமூக வலைதளப்பக்கங்களில் வெளியிட்டிருக்கிறார் மாஸ்டர் மகேந்திரன். இதோ அந்த வீடியோ.