44 வயதில் பிரபல சீரியல் நடிகை திருமணம் செய்து கொண்டிருக்கும் நிலையில் அது குறித்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாக ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து வருகிறார்கள். அதாவது தமிழ் சினிமாவில் 90 காலகட்டத்தில் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் தான் நடிகை லாவண்யா தேவி. இவர் சரத்குமார் நடிப்பில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றினை பெற்ற சூரியவம்சம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இதன் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான இவருக்கு தொடர்ந்து பல திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் ரஜினி நடிப்பில் வெளிவந்த படையப்பா படத்தின் மூலம் ரசிகர்கள் மனதை கவர்ந்த லாவண்யா பிறகு ஜோடி, சேது, திருமலை, வில்லன், எதிரி, ரன், சமுத்திரம், சுந்தரா ட்ராவல்ஸ் உள்ளிட்ட பல திரைப்படங்களில் துணைக் கதாபாத்திரத்தில் நடித்த இவர் இதுவரையிலும் நூறுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு கட்டத்திற்கு பிறகு இவருக்கு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் சீரியலில் நடிக்க தொடங்கினார் லாவண்யா. அந்த வகையில் தற்பொழுது சன் டிவியில் ஒளிபரப்பாகி அருவி சீரியலில் லக்ஷ்மி என்ற கதாபாத்திரத்தில் நடித்த வருகிறார். இந்த சீரியல் மிகவும் சுவாரசியமாக ஒளிபரப்பாகி வருவதால் மக்கள் மத்தியில் நல்ல ஆதரவு கிடைத்து வருகிறது.
இந்த சீரியலுக்கு முன்பே இவர் இன்னும் சில சீரியல்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு தொடர்ந்து சினிமாவில் சீரியல்கள் மற்றும் திரைப்படங்களில் நடித்து வரும் லாவண்யாவிற்கு தற்பொழுது 44 வயதாகும் நிலையில் பிரசன்னா என்பவரை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் இவர்களுடைய திருமணத்தில் ஏராளமான திரை பிரபலங்கள் மற்றும் சீரியல் பிரபலங்கள் கலந்துக் கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தனர். இந்நிலையில் தற்பொழுது லாவண்யா-பிரசன்னா இவர்களுடைய திருமண புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாக ரசிகர்கள் இவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.