lakshmi-movie

லக்ஷ்மி படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷின் மகளாக நடித்த குட்டி குழந்தையா இது.? அனிகாவுக்கே டஃப் கொடுப்பாங்க போல..

தமிழ் சினிமாவில் சிறந்த இயக்குனர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் இயக்குனர் ஏ.எல் விஜய் இவருடைய இயக்கத்தில் வெளிவரும் ஏராளமான திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் கடந்த 2018ஆம் தேதி வெளிவந்து வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றினை பெற்ற படம் தான் லட்சுமி.

இந்த படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் பிரபு தேவா இருவரும் இணைந்து நடித்திருந்தார்கள். பிரபுதேவா நடிப்பையும் தாண்டி இந்த படத்தில் தன்னுடைய சிறந்த நடன திறமையை வெளிப்படுத்தியிருந்தார். இவர்களை அடுத்து அந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்த அவர்தான் டித்யா பாந்தே.

இவரும் தன்னுடைய சிறந்த நடிப்பு திறமையை அடுத்து நடனத் திறமையை வெளிப்படுத்தி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார். இந்தத் திரைப்பட இந்த அளவிற்கு வெற்றி பெறுவதற்கு இவரும் முக்கிய காரணம் இந்த படத்திற்கு பிறகு இவர் பெரிதாக தமிழ் திரைப்படங்களில் நடிக்காமல் இருந்து வருகிறார்.

ஆனால் லட்சுமி படத்தில் நடித்ததற்காக  டித்யா பாந்தே 5 விருதுகளையும் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தினை அடுத்து சூப்பர் டான்சர் சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு டைட்டிலை வெற்றி பெற்றுள்ளார். இவ்வாறு பதினாறு வயதே ஆகும் இவர் தற்பொழுது வளர்ந்து ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார்.

ditya bhande
ditya bhande

அந்த வகையில் சமீபத்தில் நடனமாடி ரீல் செய்த வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர ஐஸ்வர்யா ராஜேஷ் மகளாக நடித்த லட்சுமியா இது என ஆச்சரியப்பட்டு வருகிறார்கள். இவ்வாறு அஜித்துடன் தொடர்ந்து இரண்டு திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்த அனிகா தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் நிலையில் திரைப்படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார் எனவே அவருக்கே டஃப் கொடுக்கும் அளவிற்கு டித்யா பாந்தே நடன வீடியோ இருக்கிறது.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.