kaatrukenna veli

தனது காதலை வெண்ணிலாவிடம் கூறிய சூர்யா.! இன்ப அதிர்ச்சியில் வெண்ணிலா..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பெரும்பாலான சீரி யல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் மிகவும் வித்தியாசமாக நல்ல கதை அம்சத்துடன் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் காற்றுக்கென்ன வேலை.நடு தர  குடும்பத்தை சேர்ந்த ஒரு பெண் தனது பெற்றோரின் விரும்பத்திற்காக பள்ளி பருவம் முடித்தவுடன் திருமணம் செய்து கொள்ள முடிவெடுக்கிறார்.

ஆனால் அந்தப் பெண்ணுக்கு படிக்க வேண்டும் என ஆசை இதன் காரணமாக திருமணம் நடக்க இருக்கும் இரவு தனது பெற்றோருக்கு தெரியாமல் சாரதா என்ற ஆசிரியரின் உதவியோடு சென்னைக்கு வந்து விடுகிறார். சாரதா கணவர் சென்னையில் ஒரு கல்லூரிக்கு உரிமையாளர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே அந்த கல்லூரியில் பல எதிர்ப்புகளை தாண்டி படித்து வருகிறார்.

‌மேலும் இவரின் ஒவ்வொரு போராட்டமும் இந்த கல்லூரியின் உரிமையாளர் சூர்யா என்பவருக்கு பிடித்து விடுகிறது பிறகு வெண்ணிலா மற்றும் சூர்யா இருவரும் காதலை சொல்லாமல் காதலித்து வருகிறார்கள். பிறகு பல பிரச்சனைகள் நடைபெற்று வரும் நிலையில் சாரதா தனது மகன் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் வெண்ணிலாவின் உதவியோடு அவர்களுடன் இணைந்து வாழ தொடங்கியுள்ளார்.

மேலும் வெண்ணிலாவும் சூர்யா குடும்பத்தோடு ஒரே வீட்டில் வாழ்ந்து வருகிறார்கள். இப்படிப்பட்ட நிலை இந்த குடும்பத்திலிருந்து இவரை பிரிக்க வேண்டும் என்பதற்காக வெண்ணிலாவின் அக்கா கணவர் மற்றும் அவருடைய அம்மா அனைவரும் அவர்களின் வீட்டிற்கு அழைத்து செல்கிறார்கள்.

இதனால் வெண்ணிலா சூர்யா இருவரும் மிகுந்த மன வருத்தத்தில் இருந்து வரும் நிலையில் தற்போது இருவரும் ஒருவரை ஒருவர் தனது காதலை சொல்லாமல் இருந்து வந்த நிலையில் தற்பொழுது சூர்யா வெண்ணிலாவை சந்தித்து தனது காதலை கூறுகிறார் எனவே இன்ப அதிர்ச்சியில் வெண்ணிலா என்ன சொல்வது என்று தெரியாமல் இருக்கிறார். மேலும் தொடர்ந்து சூர்யா நீ பதில் சொல்வதை தான் எங்கள்  வீட்டில் பேச முடியும் என கூறுகிறார் இதுதான் இன்றைய எபிசோடில் ஒளிபரப்பாக இருக்கிறது.