sathya serial

நடிகையை காதலிக்கும் சத்யா சீரியல் நடிகர்!! வைரலாகும் வீடியோ.

sathya serial actor love proposal to iyra agarwal video: தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி போலவே ஒரு நிகழ்ச்சியை நடத்துகின்றனர். இந்த நிகழ்ச்சியில் 26 பேர் ஒரே வீட்டில் 3 நாட்கள் தங்க போகிறார்களாம். பிக் பாஸ் வீட்டில் இருப்பது போலவே இந்த வீட்டிலும் சமையலறை, படுக்கையறை போன்றவை அமைக்கப்பட்டுள்ளது.

டிஆர்பி ரேட்டிங்கில் விஜய் டிவியை ஓவர்டேக்  செய்வதற்காகவே இந்த நிகழ்ச்சியை  ஜீ தமிழில் ஒளிபரப்ப போகின்றனர் எனவும் பேசப்படுகிறது. மேலும் விஜய் டிவியில் ஒலிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஐபிஎல் போட்டி  நடப்பதால் கடந்த மூன்று சீசனில் கிடைத்த வரவேற்பு போல இந்த சீசனில் இன்னும் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில் விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ப்ரமோ விடுவது போன்று ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் இந்த ஜீ குடும்ப நிகழ்ச்சிக்கு ப்ரமோ வெளியாகியுள்ளது. மேலும் விஜய் டிவியை பார்த்து எப்போதும் காப்பி அடிப்பது தான் இந்த ஜீ தமிழ் தொலைக்காட்சி பொழப்பா என ரசிகர்கள் கழவி ஊற்றுகின்றனர்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ராஜா மகள் எனும் சீரியலில் நடிக்கும் நடிகை ஐரா அகர்வாலிடம் சத்யா சீரியல் நடிகர்  காதலிப்பதாக சொல்கிறார். அதற்கு அவர் சிரித்தபடியே வெட்கப்படுகிறார், இந்த காட்சியை பார்ப்பதற்கு பிக் பாஸ் சீசன் 1 ஓவியா, ஆரவ் போன்று தெரிகிறது.

அதுவும் குறிப்பாக ஓவியா செய்வது போலவே அந்த சீரியல் நடிகை செய்வதால் இப்படியா காப்பி அடிப்பது என ரசிகர்கள் கூறுகின்றனர். இதோ அந்த வீடியோ.

https://youtu.be/UpRERss7-QM