கொடூர சைக்கோவாக ஹீரோ அவதாரம் எடுத்திருக்கும் அர்ஜுன் தாஸ்.. ரொமான்ஸ் வேற லெவல்.! அநீதி பட ட்ரெய்லர் இதோ

ஹீரோக்களுக்கு எந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறதோ அதேபோல் வில்லன் நடிகர்களுக்கும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது. அப்படி வில்லனாக தனது சிறந்த நடிப்பினால் ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் தான் நடிகர் அர்ஜுன் தாஸ் இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகிய மிகப்பெரிய வெற்றியினை பெற்ற கைதி திரைப்படத்தில் அன்பு என்ற கேரக்டரில் வில்லனாக நடித்து மிரட்டி இருந்தார்.

இவருடைய உரத்த குரலுக்கு ரசிகர்கள் கூட்டம் இருந்து வருகிறது இந்நிலையில் தற்பொழுது அநீதி படத்தின் மூலம் ஹீரோவாக அவதாரம் எடுத்துள்ளார். நீண்ட நாட்களாக நடைபெற்று வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு தற்பொழுது நிறைவடைந்திருக்கும் நிலையில் வருகின்ற ஜூலை 21ஆம் தேதி அன்று திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய இருக்கின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அப்படி அதில் அர்ஜுன் தாஸ் சைக்கோ கேரக்டரில் கதாநாயகனாக நடித்திருக்கிறார் இவருக்கு ஜோடியாக நடிகை துஷாரா விஜயன் நடித்திருக்கும் நிலையில் இவர்களுடைய ரொமான்ஸ் காட்சிகள் அழகாக காமிக்கப்பட்டுள்ளது.

எனவே இந்த படம் நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் ஒரு கட்டத்தில் அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கக்கூடிய அர்ஜுன் தாஸ் கொடூரமாக மாறி உள்ளார். இதனை அடுத்து இந்த படத்தில் அர்ஜுன் தாஸ்  டெலிவரி பாய் கேரக்டரில் நடித்திருக்கும் நிலையில் முழுக்க முழுக்க சைக்கோ த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ளது.

இந்த படத்தை சங்கரின் அசிஸ்டன்ட் டைரக்டர் வசந்த் பாலன் இயக்கி உள்ளார். இதற்கு முன்பு இவர் அங்காடி தெரு, அரவான், காவிய தலைவன்,ஜெயில் போன்ற திரைப்படங்களை இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரையிலும் வில்லனாக பார்த்த அர்ஜுன் தாஸ் இந்த படத்தின் மூலம் ஹீரோவாகவும், ரொமான்டிக் காட்சிகளிலும் பார்க்கும் பொழுது வித்தியாசமாக இருக்கிறது.