pantavar illam

பாண்டவர் இல்லம் சீரியல் நடிகையின் ட்ரான்ஸ்பிரேஷன்.! இணையதளத்தில் கலக்கும் வீடியோ

தற்பொழுது உள்ள அனைத்து தொலைக்காட்சிகளிலும் போட்டி போட்டுக்கொண்டு நல்ல தரமான கதை உள்ள பல சீரியல்களை ஒளிபரப்பி வருகிறார்கள் அந்த வகையில் ஒன்றுதான் சன் டிவி. சன் டிவி சீரியல் பெயர் போன ஒரு தொலைக்காட்சி அந்த வகையில் கிட்டத்தட்ட 25 வருடங்களாக பல சீரியல்களை ஒளிபரப்பி வருகிறார்கள்.

ஆரம்பத்தில் இந்நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் ஆதரவை பெற்று வந்தது. அதன்பிறகு இழுத்துப் போர்த்திக் கொண்டு நடிக்கும் வெள்ளித்திரையில் இருந்து சின்னத்திரைக்கு வந்த நடிகைகளை வைத்து சீரியல்களை ஒளிபரப்பி வந்ததால் ரசிகர்கள் மற்ற தொலைக்காட்சிகள் பார்ப்பதை தொடங்கினார்கள்.

அதன் பிறகு இதனை அறிந்துகொண்ட சன் டிவி தற்போது தான் கவர்ச்சியில் ஆர்வமுள்ள பல புதுமுக நடிகைகளையும், ரசிகர்கள் விரும்பும் வகையில் நல்ல தரமான கதை உள்ள சீரியல்களையும் இயக்கி வருகிறார்கள். அந்த வகையில் தற்போது தமிழ் தொலைக்காட்சிகளில் முன்னணி தொலைக்காட்சியாக வந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் 2019ஆம் ஆண்டு வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் பாண்டவர் இல்லம். இந்த சீரியலில் ஹீரோயினாக பாப்ரி கோஷாவும், துணை நடிகையாக ஆர்த்தி சுபாசும் இவர்களை தொடர்ந்து இன்னும் பல நட்சத்திரங்களும் ஒன்றிணைந்து நடித்து வருகிறார்கள்.

தற்பொழுது ஆர்த்தி சுபாஷ் தனது இன்ஸ்டாகிராமில் வீடியோக்கள் வெளியிடுவது புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். அந்த வகையில் தற்பொழுது சிறுவயதில் தனது அம்மாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் தற்போது அவர் எப்படி உள்ளார் என்ற புகைப்படங்களையும் ஒன்றிணைத்து ட்ரான்ஸ்லேஷன் வீடியோ ஒன்றை உருவாக்கி அதனை பதிவிட்டுள்ளார்.  இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.