yashika-ananth

நாக்கை கடித்துக்கொண்டு லோக்கலாக இறங்கி நடனமாடும் யாஷிகா.! வைரலாகும் வீடியோ

தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக வலம் வரும் யாஷிகா ஆனந்த் நாக்கை மடித்துக் கொண்டு செம குத்து குத்தும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. நடிகை யாஷிகா ஆனந்த் பிக் பாஸ் சீசன் 2ல் கலந்துகொண்டு ரசிகர்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தார். ஆனால் பிக் பாஸ் சீசனில் கலந்து கொள்வதற்கு முன்பு இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படத்தில் நடித்து ரசிகர்களிடையே பிரபலம் அடைந்தவர்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.  என்னதான் படங்களில் நடித்தாலும் இவருக்கு சிறந்த கதை உள்ள திரைப்படம் கிடைக்கவே இல்லை இவருக்கு வரும் கதாபாத்திரங்கள் கவர்ச்சி கதாபாத்திரமாகவே அமைகின்றன.

yashika-ananth
yashika-ananth

அதனால் இவர் நடித்துவரும் படங்கள் அனைத்தும் பெரிதாக இவருக்கு பெயரைப் பெற்றுக் கொடுக்கவில்லை அதே போல் இவரை கவர்ச்சி கதாபாத்திரமாக தான் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்கள் பார்த்து வருகிறார்கள்.  இதனாலேயே தொடர்ந்து எப்படியாவது பட வாய்ப்பை பிடித்துவிட வேண்டும் என விதவிதமாக போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அதிலும் இவர் வெளியிடும் புகைப்படங்களைப் பார்த்தால் ரசிகர்கள் முகம் சுளிக்கும் படி அமைந்து வருகிறது. இந்த நிலையில் சமூகவலைதளத்தில் அடிக்கடி சர்ச்சைகளை ஏற்படுத்தும் புகைப்படம் மற்றும் வீடியோவை வெளியிட்டு வரும் யாஷிகா ஆனந்த்.  துபாயில் ஹாலிடே-யில் யாஷிகா ஸ்கை டைவிங் செய்து அசத்தியுள்ளார்.

இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் வேற லெவல் வீடியோ என புகழ்ந்து தள்ளி நாளும் ஒரு சில ரசிகர்கள் இதுபோல் வீடியோவை வெளியிட்டால் எப்படி உங்களுக்கு நல்ல கதை உள்ள திரைப்படம் அமையும் என அறிவுரை கூறி வருகிறார்கள்.

https://youtu.be/5i-zItjSxZE

vedhika

நடிகை வேதிகாவின் ஜிம் வொர்க் அவுட் வீடியோ.!! என்ன இருக்குன்னு குறைக்கிரிங்கன்னு கலாய்க்கும் ரசிகர்கள்..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை வேதிகா. இவர் பரதேசி திரைப்படத்தின் மூலம் ஒட்டு மொத்த ரசிகர்கள் மற்றும் திரையுலகினர்களை வெகுவாக கவர்ந்தார்.

இப்படத்திற்கு முன்பு முனி உட்பட இன்னும் பல படங்களில் நடித்திருந்தாலும் அப்படங்கள் இவர் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை தரவில்லை. பிறகு பாலிவுட்டில் தி பாடி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

இப்படம் பாலிவுட்டில் முதல் படமாக இருந்தாலும் இவர் அப்படத்தில் செய்த ரொமான்ஸ் மற்றும் நடிப்பினால் அனைவரையும் கவர்ந்தார்.

பொதுவாக சினிமாவில் நடிகைளாக இருந்தாலும் நடிகர்களாக இருந்தாலும் ஒர்க் அவுட் செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.

அந்த வகையில் வேதிகாவும் உடலை ஸ்லிம்மாக வைப்பதற்கு  கடினமாக ஒர்க் அவுட் செய்யும் வீடியோவை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.இதோ அந்த வீடியோ.

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.

irandam-kuththu

முழுக்க முழுக்க இரட்டை அர்த்தத்தில் வெளியான இரண்டாம் குத்து படத்தின் சிங்கிள் ட்ராக்.! அடப்பாவிகளா அதுக்குன்னு இப்படியா பாடல் எழுதுவீங்க

தமிழ் சினிமாவில் அடல்ட் காமெடி திரைப்படங்களை இயக்கி வருபவர்களில் சந்தோஷ் பி ஜெயக்குமார் என்பவரும் ஒருவர், இவர் முதன்முதலில் ஹர ஹர மகாதேவி என்ற திரைப்படத்தை இயக்கி வெற்றி கண்டார்.

அதனைத் தொடர்ந்து அடுத்ததாக இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படத்தை மீண்டும் அடல்ட் காமெடி ஜானரில் இயக்கி ரசிகர்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தார், அது மட்டுமில்லாமல் பல விமர்சனங்கள் எழுந்தாலும் இந்த திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது.

இந்த நிலையில் தற்போது இருட்டு அறையில் முரட்டு குத்து இரண்டாம் பாகமான இரண்டாம் குத்து திரைப்படத்தை பி சந்தோஷ் ஜெயக்குமார் இயக்கி வருகிறார், படத்தை இயக்குவது மட்டுமல்லாமல் படத்தில் ஹீரோவாகவும் நடித்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் பிக்பாஸ் பிரபலமான டேனி  மொட்டை ராஜேந்திரன், ஷாலு ஷம்மு என பலரும் இந்த திரைப்படத்தில் நடித்து உள்ளார்கள், அந்த திரைப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே வைரலானது அது மட்டுமில்லாமல் பல பிரபலங்களும் முகம் சுளிக்கும் வகையில் கருத்துக்களை தெரிவித்து வந்தார்கள்.

இந்த நிலையில் தற்போது இந்த திரைப்படத்தில் இருந்து சிங்கிள் ட்ராக் ஒன்று வெளியாகி மேலும் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது அது மட்டுமில்லாமல் பாடல் முழுவதும் இரட்டை அர்த்தத்தில் வரிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதோ அந்த பாடல்.

mookuththi-amman

நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் திரைப்படத்திலிருந்து “ஆடி குத்து” வீடியோ பாடல்

நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் ஆகவும் முன்னணி நடிகையாகவும் வலம் வருகிறார்.

இந்த நிலையில் நயன்தாரா தற்பொழுது காத்துவாக்குல ரெண்டு காதல், ரஜினியின் அண்ணாத்த, அதுமட்டுமில்லாமல் ஆர் ஜே பாலாஜி உடன் இணைந்து மூக்குத்தி அம்மன் திரைப்படத்திலும் நடித்து முடித்துள்ளார்.

மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களைப் பெற்றது. அதுமட்டுமில்லாமல் படத்தில் ஆர் ஜே பாலாஜி காமெடியில் கலக்கி இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் மூக்குத்தி அம்மன் திரைப்படத்திலிருந்து ஆடி குத்து என்ற வீடியோ பாடல் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

sandy

பாண்டியன் ஸ்டோர் முல்லை மற்றும் பிக்பாஸ் சாண்டி கேரவனில் அடிக்கும் கூத்து!! வைரலாகும் வீடியோ.!! செம்மையா என்ஜாய் பண்றாங்கப்பா..

dance master sandy and pandiyan store mullai video viral:விஜய் டிவியில் பொதுவாக வித்தியாசமான கதை உள்ள மற்றும் அனைவரையும் கவரும் வகையிலான சீரியல்களை ஒளிபரப்பி வருகிறார்கள். அந்தவகையில் சீரியல் ஆரம்பித்த நாளிலிருந்து இன்று வரையிலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவரும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்.

இந்த சீரியல் தான் தற்பொழுது உள்ள குழந்தைகள், காதலர்கள் குடும்ப பெண்கள் முதியவர்கள் என அனைவருக்கும் பிடித்த ஒன்றாக திகழ்கிறது. இந்த சீரியல் மிகவும் ரசிகர்களை கவர்வதற்கு முக்கிய காரணம் அதில் நடித்து வரும் முல்லை மற்றும் கதிர் கேரக்டரில் உள்ள சித்ரா மற்றும் குமரன் தான்.

இவர்களின் ஒன்ஸ்கிரீன் லவ் இளசுகளை வெகுவாக கவர்ந்தது. இந்த சீரியலின் மூலம் இவர்களுக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உருவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சீரியலில் நடிப்பவர்கள் புகைப்படம் மற்றும் வீடியோக்களை இணையதளத்தில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள் அந்த வகையில் தற்போது . அந்த சீரியலில் நடிக்கும் முல்லை சாண்டி மாஸ்டருடன் இணைந்து மேயாத மான் என்ற திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த பாடல் ஒன்றுக்கு வேனில் டான்ஸ் ஆடும் வீடியோ வெளியாகியுள்ளது .

இதனை பார்க்க மிகவும் காமெடியாகவும்,  மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. தற்பொழுது இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.இதோ  இந்த வீடியோ.

https://www.instagram.com/p/BvDmfZiFfpM/?utm_source=ig_web_copy_link

abarna

லிப் லாக் காட்சியில் பின்னி பெடலெடுக்கும் ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ “அபர்ணதி” வைரலாகும் வீடியோ.!

தமிழில் தொடர்ந்து தரமான படங்களை இயக்கி வெற்றி இயக்குனர் என்பதை தாண்டி எதார்த்தமான இயக்குனர் என பெயரெடத்தவர் வசந்தபாலன், இவர் தற்பொழுது ஜிவி பிரகாஷ் குமார்யை வைத்து ‘ஜெயில்’ என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார், ஏற்கனவே வசந்தபாலன் ஜிவி பிரகாஷ் அவர்களுக்கு இசை அமைப்பதற்கு முதல் வாய்ப்பு கொடுத்து அழகு பார்த்தவர்.

அதன்பிறகு தற்பொழுது ஹீரோவாக்கி அழகு பார்க்கிறார் 2006 ஆம் ஆண்டு வசந்த பாலன் இயக்கத்தில் வெளியாகிய வெயில் திரைப்படம் மூலம் ஜிவி பிரகாஷ் இசையமைப்பாளராக அறிமுகமானார் அதன்பிறகு 14 வருடங்கள் கழித்து வசந்தபாலன் இயக்கத்தில் இசையமைப்பாளராக மட்டுமல்லாமல் நடிகராகவும் நடித்துள்ளார்.

‘ஜெயில்’ திரைப்படம் ஊரடன்கிற்கு பிறகு திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது இந்த திரைப்படத்தில் நடிகர் ஆர்யா திருமணத்திற்கு பெண் தேடிய நிகழ்ச்சியான ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ என்ற நிகழ்ச்சியில் ஆர்யாவை துரத்தி துரத்தி காதலித்து அவருக்காக அழுது ஆர்ப்பாட்டம் செய்த தஞ்சாவூர் பெண்ணான அபர்ணதி ஹீரோயினாக அறிமுகமாகியுள்ளர்.

இந்த நிலையில் இந்த திரைப்படத்திலிருந்து கடந்த 15ஆம் தேதி காத்தோடு காத்தாக என்ற பாடல் வெளியிடப்பட்டது, இந்த பாடலை தனுஷ் மற்றும் அதிதி ராவ் இணைந்து பாடி இருந்தார்கள மனதை வருடிய இந்தப் பாடல் ரசிகர்களிடையே நல்ல விமர்சனங்களைப் பெற்றது அந்த பாடலில் ஜிவி பிரகாஷ் அபர்னதி இருவரும் நெருக்கமாக ரொமான்ஸ் காட்சிகளில் நடித்திருந்தார்.

அதுமட்டுமில்லாமல் சில லிப் லாக் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன, இந்த படத்தில் அபர்ணதி ஜிவி பிரகாஷ் உடன் லிப் லாக் காட்சியில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது, மனதை மயக்கும் இசையில் அழகான வரிகளில் காதலர்களின் கொஞ்சல் என வெளியாகிய இந்த பாடலை யூடியூபில் 3 மில்லியனுக்கு அதிகமான பார்வையாளர்களை கடந்து வைரலாகி வருகிறது.

vijay enna azhaku

22 வருடத்திற்கு பிறகு விஜய்யின் என்ன அழகு பாடலுக்கு நடனம் ஆடிய இயக்குனர்கள்.! அசத்தல் வீடியோ உள்ளே

dance masters dancing to Vijay’s ena azhagu song after 22 years! video viral:நடிகர் விஜய் படங்களில் வரும் பாடல்கள் மிகப்பெரிய அளவில் ஹிட்டடிக்கும் என்பது தெரிந்ததே. எவ்வளவு பெரிய கடினமான நடனமாக இருந்தாலும் அதனை மிகவும் எளிமையாக ஆடிவிடுவார். இவரின் நடனத்தை பார்ப்பதற்காகவே ரசிகர்கள் பலர் இவரின் படத்தை விரும்பிப் பார்ப்பது வழக்கமாக வைத்துள்ளனர்.

அந்த வகையில் இளைய தளபதி விஜய் நடித்து வெளியான லவ் டுடே திரைப்படத்தில் இடம்பெற்ற என்ன அழகு என்ற பாடல் மிகவும் பிரபலமானது. இந்தப் பாடலில் நடன இயக்குனர்கள் சோபி மட்டும் ராபர்ட் இருவரும் விஜயுடன் இணைந்து ஆடி இருப்பர்கள்.

மேலும் 22 வருடங்கள் கழித்து 2019 இல் நடந்த நடன இயக்குனருக்குகான பொதுக்குழு கூட்டம் ஒன்றில் சோபி மற்றும் அவரது சகோதரர் ராபர்ட் இருவரும் இணைந்து அந்தப் பாட்டுக்கு மீண்டும் நடனம் ஆடினார்கள். தற்போது அந்த வீடியோவை சோபி அவர்கள் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

தற்போது அந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

dd 1-tamil360newz

டிடி வெளியிட்ட வீடியோவை பார்த்து கிறங்கிப் போன அவரது ரசிகர்கள்.!!

vijay tv anchor dd video: விஜய் தொலைக்காட்சியில் நம்பர் ஒன் தொகுப்பாளினியாக வலம் வந்து கொண்டிருப்பவர் டிடி என்கின்ற திவ்யதர்ஷினி. இவர் விஜய் டிவியின் செல்லப்பிள்ளை என்று அழைக்கப்படுவார். உலகம் முழுவதும் பரவிவரும் கொரோனா வைரஸினால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதனால் மக்கள், திரைப்பிரபலங்கள் என அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். இந்நிலையில் சமீபத்தில் டி டிக்கு காலில் அடிபட்டு கட்டு கட்டி நடந்தது போன்ற வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வந்தது. இந்த வீடியோவைப் பார்த்த அவரது ரசிகர்கள் டிடிக்கு ஊரடங்கில் என்ன நடந்தது என பயந்து அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு தொடர்ந்து நலம் விசாரித்துக் கொண்டே இருந்தனராம்.

தமிழ்நாடு, கனடா, அமெரிக்கா போன்ற பல நாடுகளில் இருந்து அவரது ரசிகர்கள் அவரிடம் நலம் விசாரித்துக் கொண்டே இருந்தனர் கலாம். எனவே அவர்களுக்கு பதிலளிக்கும் வகையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் ஒரு டிவி நடிகைக்கு 1.5 மில்லியன் கோடி மக்கள் நலம் விசாரிப்பது என்பது ரொம்பவும் பெரிதே.

உங்களின் அனைவரின் அன்பிற்கும் நன்றி எனக் கூறியுள்ளார். தற்போது அந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

vaathi coming-tamil360newz

வயசான வெளிநாட்டவர்களையும் ஆட்டம் போட வைத்த வாத்தி கம்மிங் பாட்டு.!! அதுவும் சோசியல் டிஸ்டன்ஸ் உடன் இப்படி ஒரு ஆட்டமா வைரலாகும் வீடியோ.

Foreigners vaathi coming dance video: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய். இவர் நடிப்பில் தற்போது மாஸ்டர் திரைப்படம் வெளியாக இருக்கிறது. இந்த திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். அதுமட்டுமில்லாமல் படத்திற்கு அனிருத் தான் இசை அமைத்துள்ளார்.

மேலும் இந்த திரைப்படம் ஏப்ரல் மாதத்தில் ரிலீசாக வேண்டியது. ஆனால் ஊரடங்கு காரணத்தால் படத்தின் ரிலிஸ் தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது, மாஸ்டர் திரைப்படத்திலிருந்து பாடல் மற்றும் போஸ்டர் அனைத்தும் வெளியாகி ரசிகர்களிடம் வைரல் ஆனது.

அதுமட்டுமில்லாமல் மாஸ்டர் திரைப்படத்தில் உள்ள வாத்தி கம்மிங் பாடல் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமடைந்து வருகிறது. இந்த பாடலுக்கு பல பிரபலங்கள் டிக் டாக் செய்து ஆட்டம் ஆடி வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் மக்களும் டிக் டாக் செய்து வருகிறார்கள்.

இப்படி இருக்கும் நிலையில் வெளிநாட்டில் சோசியல் டிஸ்டன்ஸ் உடன் வயதானவர்கள் இந்த பாடலுக்கு நடனமாடியுள்ளார்கள். அந்த வீடியோவை அனைவரும் தன்னுடைய சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.