ponniyin-selvan-1

சோழ வம்சத்தை வேரோடு அழிக்கும் வீரபாண்டியன் ஆபத்தவிகள்.! பொன்னியின் செல்வன் எக்ஸ்கிளூசிவ் வீடியோ இதோ..

மணிரத்தினம் இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் தான் பொன்னியின் செல்வன் இந்த படத்தில் நடிகர்கள் விக்ரம், கார்த்திக், ஜெயம் ரவி, பார்த்திபன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படம் வருகின்ற 30ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் உள்ள பல திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

மேலும் இந்த திரைப்படத்தினை மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா ப்ரோடுக்ஷன் இணைந்து தயாரித்து இருக்கிறது இந்த படத்திற்கு ஆஸ்கர் நாயகன் ஏ ஆர் ரகுமான் அவர்கள் இசையமைத்து இருக்கிறார். கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை ஏராளமானவர்கள் படமாக்க வேண்டும் என நினைத்தார்கள் அந்த வகையில் மணிரத்தினமும் 20 ஆண்டுகளாக இந்த கதினை படமாக்க வேண்டும் என முயற்சி செய்து வந்தார்.

இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது எழுத்தாளர் ஜெயமோகனின் உதவியோடு படமாக்கி இருக்கிறார் இந்த படம் கிட்டத்தட்ட 570 கோடி பட்ஜெட்டில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளிலும் உருவாகியுள்ளது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், நடிகர்களின் கதாபாத்திரங்கள், டீசர், ஆடியோ வெளியீடு, ட்ரெய்லர், பாடல்கள் என அனைத்தும் அடுத்தடுத்து வெளியாகி மிகப்பெரிய வரவேற்பினை பெற்றது.

இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது பட குழுவினர்கள் ப்ரோமோஷன் வேலைகளை ஆரம்பித்து இருக்கிறார்கள் இந்த படத்தில் மெயின் வில்லனாக வீரபாண்டியனின் ஆபத்துதவிகள் பற்றிய எக்ஸ்கிளூசிவ் வீடியோ வெளியாகி உள்ளது. அதாவது அந்த வீடியோவின் மூலம் பொன்னியின் செல்வன் சோழர்களின் ஆட்சி காலம் பொற்காலமாக மாறுவதற்கு முந்தைய காலகட்டத்தில் சோழர்களுக்கு மிகப்பெரிய எதிரிகளாக பாண்டியர்கள் இருந்தார்கள்.

எனவே செவ்யூர் போர் மிகவும் முக்கியமாக வாய்ந்த ஒன்றாக இருந்தது சொல்லப்போனால் இந்த மொத்த கதையின் காரணமும் இந்த போர் மட்டும்தான் சுந்தர சோழனின் மூத்த மகனான ஆதித்ய கரிகாலன் இந்த போரில் தான் பாண்டிய மன்னன் வீரபாண்டியன் கதையை கொய்து விடுவான் என் காரணமாக சோழனை கவருவதற்காக வீரபாண்டியனின் ஆபத்துதவிகள் உறுதிமொழி எடுத்துக்கொண்டு சோழ நாட்டிற்குள் புகுவார்கள்.

அந்த கூட்டத்தின் ராணியாக நந்தினி தேவி இருப்பாள். இவ்வாறு அனைவரும் எதிர்க்கும் பாண்டிய ஆபத்து தவியாக ரவிதாசனாக கிஷோர் நடித்திருக்கிறார். மேலும் ரியாஸ் கான் வேளாளராகவும் இவர்களின் காடுகளில் பதுங்கி நந்தினியின் கட்டளைகளுக்காக காத்திருப்பார்கள் நந்தினி தேவி அரண்மனையில் உள்ளே இருந்தேன் ஆதித்ய கரிகாலனின் கடைசி நாளுக்காக காத்திருப்பாள்.