nayanthara

ஒவ்வொரு நிமிடமும் திகிலில் மிரட்டும் நயன்தாராவின் கனெக்ட் ட்ரைலர் இதோ…

நடிகை நயன்தாரா நடித்துள்ள கனெக்ட் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை நயன்தாரா தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்துவரும் நிலையில் தற்பொழுது கனெக்ட் திரைப்படத்தில் நடித்த முடித்துள்ளார்.

இதற்கு முன்பு நயன்தாரா நடிப்பில் வெளிவந்த மாயா திரைப்படத்தை  இயக்கிய அஸ்வின் சரவணன் இயக்கத்தில் இரண்டாவது முறையாக இணைந்து கனெக்ட் திரைப்படத்தில் நடித்துள்ளார். அந்த படத்தின் ட்ரெய்லரை சற்று முன்பு படக்குழுவினர்கள் வெளியிட்டுள்ளார்கள் இந்த படத்தில் நடிகை நயன்தாராவுக்கு ஜோடியாக நடிகர் வினய் நடித்துள்ளார்.

மேலும் சத்யராஜ், பாலிவுட் நடிகர் அனுபம் கேர் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் மேலும் இந்த படத்தினை நயன்தாராவின் கணவரும் இயக்குனருமான விக்னேஷ் சிவன் தங்களுடைய சொந்த நிறுவனமான ரவுடி பிரக்சஸ் நிறுவனத்தின் மூலம் பிரம்மாண்டமாக இந்த திரைப்படத்தை தயாரித்து உள்ளார்கள் ஹாரர் மற்றும் திரில்லர் கதைய அம்சமுடன் உருவாகி உள்ள இந்த படத்தின் சற்று முன்பு வெளியாகியுள்ளது.

மேலும் மிகவும் தித்திக் நிமிடங்களுடன் இருக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது மேலும் அந்த ட்ரெய்லரில் நயன்தாராவின் மகள் ஒரு அமானுஷ்ய சக்தியிடம் மாட்டிக் கொள்ள அவரை அதிலிருந்து எப்படி மீட்கிறார் அதற்காக எந்த அளவிற்கு நயன்தாரா மிகவும் பரபரப்பாக பயத்துடன் இருக்கிறார் என்ற காட்சிகளுடன் இடம்பெற்றுள்ளது மேலும் இந்த திரைப்படம் வருகின்ற டிசம்பர் மாதம் 22ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

nayanthara-1

திரில்லரில் மிரட்டும் நயன்தாராவின் ‘கனெக்ட்’ படத்தின் டீசர் இதோ.!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் பிறந்த நாளை முன்னிட்டு அவருடைய சொந்த நிறுவனமான ரவுடி பிரிக்ஸ் நிறுவனம் சார்பில் உருவாகியுள்ள ‘கனெக்ட்’ திரைப்படத்தின் டீசர் தற்பொழுது வெளியாகி உள்ளது.

சற்று முன்பு வெளியான இந்த படத்தின் டீசர் தற்பொழுது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்தப் படம் ஹாரர் ஜர்னரில் எடுக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தினை அஸ்வின் சரவணன் இயக்கியுள்ளார் இவர் இதற்கு முன்பாக நடிகை நயன்தாரா நடிப்பில் வெளிவந்த மாயா திரைப்படத்தின் இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இதனை தொடர்ந்து இந்த படத்தில் நடிகை நயன்தாராவுக்கு ஜோடியாக நடிகர் வினய் நடித்துள்ளார் இவர்களை தொடர்ந்து சத்தியராஜ், மற்றும் பாலிவுட் நடிகர் அனுப்பப் கேர் ஆகியோர்களும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். நீண்ட இடைவெளிக்குப் பிறகு நயன்தாராவின் நடிப்பில் ஹாரர் படம் உருவாக உள்ளது.

இந்த திரைப்படத்தின் டீசர் நல்ல வரவேற்பினை பெற்று வரும் நிலையில் 95 நிமிடங்கள் இடைவெளி இல்லாமல் ஓடும் படமாக எடுக்கப்பட்டுள்ளதாகவும் எனவே இடைவெளி இல்லாமல் இந்த திரைப்படம் ஒளிபரப்பப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இந்த படம் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு வருகின்ற டிசம்பர் 22ஆம் தேதி அன்று வெளியாக உள்ளதாக படக்குழுவினர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள்.

எனவே இந்த படத்தின் ட்ரைலர் கூடிய விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் நயன்தாராவுக்கு பிறந்த நாள் என்பதால் பலரும் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள். இவ்வாறு நயன்தாராவின் பிறந்த நாளை முன்னிட்டு இன்னும் மற்ற திரைப்படங்களின் அப்டேட்டுகளும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.