ethir-neechal-serial

வீட்டை விட்டு வெளியே போக சொன்ன மருமகள்கள்.! ஜான்சி ராணியை ரவுண்டு கட்டி வெளுத்து விடுறாங்களே… எதிர்நீச்சல் ப்ரோமோ வீடியோ..

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது அந்த வகையில் அனைவருடைய எதிர்பார்ப்பையும் தற்போது ஊற்றி மூடி இருக்கும் நிலையில் ஆதரிக்கும் கரிகாலனுக்கும் குணசேகரன் நினைத்தது போலவே திருமணம் நடைபெற்று முடிந்து இருக்கிறது.

இதனை அடுத்து குணசேகரன் அப்பத்தாவின் 40% சொத்தை ஆட்டையை போடுவதற்காக ஆடிட்டரை வரவழைத்த நிலையில் அவர்களுடைய மருமகளின் மீது ஒரு கண்ணு வைத்திருக்க வேண்டும் என கூறுகிறார் எனவே இதனால் வீட்டை விட்டு சென்ற சக்தி ஜனனியை பெரிய டிராமா போட்டு வீட்டிற்கு வரவழைத்துள்ளார்.

மறுபுறம் ஜீவானந்தம் கௌதமிடம் ஜனனியை பற்றி கூற அதற்கு கௌதம் ஜனனி என்னுடைய பிரண்டு தான் என அனைத்து உண்மையையும் சொல்கிறார். மேலும் எப்படியாவது அப்பத்தாவின் சொத்தை தர வேண்டியவர்களுக்கு சென்றடைய வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்து வரும் நிலையில் அடுத்த என்ன டூரிஸ்ட் வைக்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தற்பொழுது வெளியாக இருக்கும் ப்ரோமோவில் கரிகாலன் ஆதிரை இருவரும் மறு வீட்டிற்கு சென்றிருக்கும் நிலையில் அங்கு மருமகள்கள் ரசம் சோறு போட்டு ஓரமாக படுக்க வைத்து உள்ளார்கள் எனவே இதனை பற்றி ஜான்சி ராணியிடம் கரிகாலன் கூற குணசேகரன் வீட்டிற்கு வந்த ஜான்சி ராணி அனைத்து மருமகள்களையும் மிரட்ட பிறகு மருமகள்களும் வீட்டை விட்டு கிளம்பு என கூறுகிறார்கள்.

ஜான்சிராணி தெரியும்டி எனக்கு அப்பவே நல்லா சிரி சிங்காரிச்சு அடக்க ஒடக்கமா என் வீட்டுக்கு வந்த பொழுது எனக்கு தெரியும் ஏதோ பெருசா கலவரம் பண்றதுக்கு பிளான் போடுறீங்கன்னு பிறகு ரேணுகாவை இங்க பாரு பாவாட சாமி அப்படியே கண்ணு முழியெல்லாம் தோண்டி எடுத்துடுவேன் பாத்துக்க எனக் சொல்ல இதற்க்கு ஜனனி ஹலோ இப்படி அநாகரீகமா பேசுறத நிப்பாட்டுங்க முதல்ல வெளியில போங்க என கூற அதற்கு ஜான்சி ராணி கெஸ்ட் ஹவுஸ்ல இருக்கிற நீ எல்லாம் என்னை வெளியில் போக சொல்ல முடியாது என அசிங்கப்படுத்த உடனே நந்தினி ஏய் நான் சொல்றேன் பாரு வெளியில போ என கூற எங்க அண்ணன் என காட்டுகிறார்.

பிறகு ஞானம் அண்ண இங்க இல்ல கிளம்பு என சொல்ல பிறகு ரேணுகாவும் நாங்களே நொந்து நூல போய் கொலவெறியில இருக்கோம் அதை இதையும் பேசிக்கிட்டு இருக்க என்ன சொல்லாத அதற்கு ஜான்சிராணி மறு வீட்டுக்கு கூப்பிட்டு இப்படிதான் சோறு போடாமல் ஓரமா படுக்க வைத்து இருப்பீர்களா எனக் கேட்க இதற்கு நந்தினி ரசம் சோறு நல்லா இருக்குன்னு நாலு தடவை வாங்கி தின்னான் கேட்டு வாங்கி சாப்பிட்டான் குண்டானே காலி ஆயிடுச்சு உள்ள போய் பாரு என சொல்ல பிறகு நான் சமைச்சா ஊரே மணக்கும் என கூறுகிறார்.

ethirneechal

வெட்கமே இல்லாமல் மீண்டும் ஜனனியை வீட்டிற்கு அழைத்த குணசேகரன்.! இது என்ன புது டிராமாவா இருக்கு குழப்பத்தில் ரசிகர்கள்.! எதிர்நீச்சல் ப்ரோமோ வீடியோ

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் தொடர்ந்து பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் நிலையில் குணசேகரன் எப்படியாவது அப்பத்தாவின் 40% சொத்தை ஆட்டையை போட்டு விட வேண்டும் என பல முயற்சிகளை செய்து வருகிறார். ஆனால் தற்பொழுது அதற்கு முட்டுக்கட்டையாக அனைத்து பிரச்சனைகளும் வந்து நிற்கிறது.

அதாவது ஆதிரை கரிகாலனுக்கு திருமணம் நடத்தி வைக்க வேண்டும் என குணசேகரன் நினைத்த நிலையில் இதற்கு எதிராக ஆதிரை அருணுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டுமென ஜனனி சக்தி போராடி வந்தார்கள் இதில் கடைசியாக ஆதிரை கரிகாலனுக்கு திருமணம் நடைபெற்று முடிந்திருக்கும் நிலையில் ஜனனி இதில் தோற்று விட்டதாக கூறி குணசேகரன் இவர்களை வெளியில அனுப்பி வைத்து விட்டார்.

ஆனால் இந்த நேரத்தில் மற்ற மருமகள்களும் செல்ல பிறகு ஜனனி சக்தி மட்டுமே வீட்டை விட்டு கிளம்புகிறார்கள். இவ்வாறு இதனை அடுத்து ஆதிரை அழுதுக் கொண்டே கரிகாலன் வீட்டில் அமர்ந்திருக்க அதற்கு ஜான்சிராணி இப்ப நீ இந்த புடவையை மாத்தலினா நானே எல்லாரும் முன்னாடியும் அவுத்து மாத்தி விட்டுடுவேன் என கூறி சண்டை போட பிறகு கரிகாலன் ஜான்சிராணியை அனுப்பி வைக்கிறார்.

இந்த நேரத்தில் ரேணுகா நந்தினி இருவரும் கரிகாலனுக்கு போன் போட்டு ஆதிரையிடம் தருமாறு கூற ஆதிரை பேச முடியாது என் வாழ்க்கையே நாசமா போயிடுச்சு யாரிடமும் இனிமேல் பேச முடியாது என கூறிவிட்டு போனை வைத்து விடுகிறார். அதற்கு ரேணுகா நாம அவள அருணுடன் சேர்த்து வைத்து விடுவோம்னு நினைச்சு தான் நம்மள அண்ணி அண்ணின்னு பேசிக்கிட்டு இருந்தா ஆனா அவளும் அந்த குணசேகரன் ரத்தம் தானே ஓடுது அவளும் அப்படித்தான் என கூறி விடுகிறார்.

மறுபுறம் ஆடிட்டர் வீட்டிற்கு அந்த நிலையில் உங்கள் மருமகள்களுக்கும் பட்டமாவுக்கும் ஏதோ ஒரு விஷயம் இருக்கு எனவே முக்கியமாக ஜனனியை கண்காணிங்கள் என கூற இப்பதான் நான் அவங்கள வீட்டை விட்டு துரத்தினேன் என சொல்ல அதற்கு ஆடிட்டர் பெரிய தப்பு செய்துவிட்டதாக சொல்கிறார் உடனே குணசேகரன் பெரிய டிராமா ஒன்றை நடத்துகிறார்.

அதாவது என் புள்ள சக்தியை வர சொல்லுங்க எனக் கூற அதற்கு ஈஸ்வரி என்ன புது ட்ராமாவா இருக்க என்ன நினைக்கிறார் பிறகு ஜனனி, சக்தி இருவரும் வீட்டிற்கு வருகிறார்கள். என்னதான் சண்டை இருந்தாலும் அண்ணன் மேல பாசம் இருக்குனு எனக்கு தெரியும் உன்னுடைய சொத்தை தந்து விடுவதாக சொல்ல எனக்கு ஒன்றும் வேண்டாம் சம்பாரிச்சு சாப்பிட அளவுக்கு எனக்கு திராணி இருக்கான்னு எனக் கூற இதோடு ப்ரோமோ நிறைவடைகிறது.

ETHIR NEECHAL

மருமகள்களை மொத்தமாக வீட்டை விட்டு வெளியேற்றிய குணசேகரன்.! கடைசியில் அட்விகேட் வைத்த ட்விஸ்ட்.. எதிர்நீச்சல் சீரியல் இன்றைய ப்ரோமோ

சன் டிவி ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில் தொடர்ந்து ஏராளமான திருப்பங்களுடன் மிகவும் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் குணசேகரன் ஜனனியை பழி வாங்குவதாக நினைத்து தனக்கு தானே ஆப்பு வைத்திருக்கிறார் அது குறித்த ப்ரோமோ வெளியாகி உள்ளது.

அதாவது அதிரை திருமணம் அருணுடன் நடக்காமல் கரிகாலனுடன் குணசேகரன் நினைத்தது போலவே நடந்து முடிந்திருக்கிறது. எனவே தான் நினைத்தது நடந்ததால் நான் தான் ஜெயித்திருக்கிறேன் என நினைத்து அனைவரையும் படாத பாடு படுத்தி வருகிறார். அப்படி இன்னைக்கு சக்திக்கும் அந்த மெட்ராஸ் காரி ஜனனிக்கும் இருக்கிறது என காத்துக் கொண்டிருந்த நிலையில் பிறகு சக்தி ஜனனி இருவரும் ஆட்டோவில் வருகிறார்கள்.

இவர்கள் வந்தவுடன் எனது காலில் விழுந்து அனைவரும் மன்னிப்பு கேட்டுவிட்டு வீட்டிற்குள் செல்லலாம் ஆனால் இந்த மெட்ராஸ் காரி மட்டும் வர முடியாது வீட்டை விட்டு போக வேண்டும் என கூறுகிறார். அப்பொழுது நான் ஜெயித்து விட்டேன் என்னிடம் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு விட்டு கிளம்பு எனக் கூற அதற்கு ஜனனி நீங்க தோத்துட்டீங்க என சொல்கிறார்.

இவ்வாறு பேசிக் கொண்டிருக்கும் பொழுதே ஜனனியை வீட்டை விட்டு வெளியில் தள்ளி விடுவதற்காக கதிர் வர சக்தி பளார் என அறைந்து என்னுடைய மனைவியை யாராவது ஏதாச்சும் சொன்னீங்கனா நான் அடிப்பேன் என பேச குணசேகரன், கதிர் என அனைவரும் அதிர்ச்சடைகிறார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் ஜனனியை குணசேகரன் வெளியில் போக சொல்ல ஜனனியும் இதற்கு மேல் கிளம்பலாம் என சொல்கிறார். அப்பொழுது வீட்டில் இருக்கும் மற்ற மருமகள்கள் நாங்களும் வருகிறோம் எனக் கூறிவிட்டு மொத்தமாக வீட்டை விட்டு கிளம்பி விட இந்த நேரத்தில் அட்வகேட் வர உங்க மருமகள்களுக்கும் பட்டம்மாளுக்கும் ஏதோ சம்பந்தம் இருக்கு சார் எனக் கூற அதற்கு குணசேகரன் இப்பதான் அவங்களெல்லாம் வீட்டை விட்டு அனுப்பினேன் எனக் சொல்ல பெரிய தப்பு பண்ணிட்டீங்களே சார் என அட்விகேட் சொல்கிறார் இதனால் குணசேகரன் குழப்பம் அடைய இதோட ப்ரோமோ நிறைவடைகிறது.