vidhaikaran

வைரம், பணம் என கடத்தலில் மிரட்டும் சதீஷ்.. மிரள வைக்கும் வித்தைக்காரன் பட டீசர்

Vithaikaaran Teaser: தமிழ் சினிமாவிற்கு காமெடி நடிகராக அறிமுகமாகி தற்பொழுது ஹீரோக்களாக கலங்கி வரும் ஏராளமான நடிகர்கள் இருக்கிறார்கள். அந்த வகையில் காமெடி நடிகர்களுக்கு பஞ்சம் இல்லாமல் இருந்து வரும் நிலையில் நகைச்சுவை நடிகராக சினிமாவிற்கு அறிமுகமாகி தற்பொழுது ஹீரோவாக கலக்கி வருபவர் தான் நடிகர் சந்தானம்.

இவரை தொடர்ந்து சூரி, யோகி பாபு என அனைவரும் கதையின் கதாநாயகர்களாக நடித்து வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது நடிகர் சதீஷ் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்திருக்கிறார். ஏற்கனவே நாய் சேகர் என்ற படத்தில் ஹீரோவாக நடித்திருந்த நிலையில் இதனை அடுத்து தற்பொழுது வித்தைக்காரன் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்த படத்தினை வெங்கி இயக்க விஜய் பாண்டி தயாரித்துள்ளார் சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. உலகத்திலேயே நாம் ஏமாறுகிறோம் என்று தெரிஞ்சும் சிரிச்சு சந்தோஷமாகி அதுக்காகவும் காசு தருகிறோம் என்றால் அது மேஜிக்ஷனுக்கு மட்டும்தான் என்ற வசனத்துடன் தொடங்க உடனே சதீஷ் மேஜிக் செய்யும் மேடைக்கு வருகிறார்.

அப்படி இந்த படத்தில் சதீஷ் மேஜிக் மேனாக நடித்ததோடு மட்டுமல்லாமல் திருடனாகவும் நடித்திருக்கிறார். ஏர்போர்ட் லாக்கர் மட்டுமல்லாமல் பறக்கின்ற ஏரோப்ளேன் கூட இவன் கொள்ளையடிப்பான் என்ற வசனங்கள் இடம் பெற்று இருக்கிறது. அந்த வகையில் வைரம் கடத்தல் என விறுவிறுப்பான காட்சிகளுடன் உருவாகி இருக்கும் விலையில் கண்டிப்பாக சதீஷ் ஹீரோவாக நடிக்கும் இந்த படம் வொர்க் அவுட் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.