eramana-rojave-2

என் பிள்ளைய என்கிட்ட இருந்து பிரிச்சுடாதமா என கதறும் ஜீவாவின் அம்மா.. என்னால் முடியாது என பிடிவாதமாக இருக்கும் பிரியா.! இந்த வாரம் ப்ரோமோ

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல் தான் ஈரமான ரோஜாவே 2 இந்த சீரியலில் பிரியா ஜீவாவை முழுமையாக ஏற்றுக் கொள்ளாமல் இருந்து வரும் நிலையில் தொடர்ந்து இவர்களுக்கிடையே பிரச்சனை ஏற்பட்டு வருகிறது. மேலும் பிரியா அமைதியாக இருந்தாலும் ஜீவாவின் அத்தை தேவி அதை இதையும் சொல்லி ஏற்றி விடுகிறார்.

பிறகு ஒரே வீட்டில் காதலித்த இருவரும் இருக்கிறார்கள் எனவே எப்படி ஒருவரை ஒருவர் மறந்துவிட்டு வாழ்வாங்க எனவே ஜீவாவை அழைத்துக்கொண்டு தனிக் குடுத்தனம் போய்விடு என பிரியாவிடம் தேவி சொல்ல இதனை ஏற்றுக்கொண்ட பிரியா எப்படியாவது ஜீவாவை தனியாக அழைத்துச் செல்ல வேண்டும் என்ற முடிவிலிருந்து வருகிறார்.

இதனைப் பற்றி ஜீவாவிடம் சொல்ல அதற்கு ஜீவா முடியாது என சொல்லிவிடுகிறார் பிறகு காவியாவிடம் நான் ஜீவாவை அழைத்துக் கொண்டு தனிக் குடுத்தனும் போகலாம்னு இருக்கேன் நீ என்ன சொல்ற என கேட்க இல்லை அத்தை மாமா இத சொன்னா ஏத்துக்கவே மாட்டாங்க எனவே தனி குடுத்தனம் போக வேண்டாம் என சொல்ல ஜீவாவும் இதேதான் சொல்றாரு  என்ன ஆனாலும் ஜீவாவை தனி குடுத்த அழைத்துக் கொண்டுதான் போவேன் என கூறி விடுகிறார்.

இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் பிரியா கோவிலுக்கு சென்று விட்டு வர ஜீவாவின் அம்மா அப்பாவிடம் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும் நான் சொல்ல போற விஷயம் உங்களுக்கு அதிர்ச்சியா இருக்கலாம் ஆனா எனக்கு வேற வழி தெரியல. நான் ஜீவாவுடன் தனி குடுத்தனம் போகலாம்னு இருக்கிறேன் மாமா என்று சொல்ல என்னம்மா சொல்ற என கேட்க அதற்கு பிரியா கல்யாணத்துக்கு முன்னாடி காதலிச்ச இருவரும் ஒரே வீட்டில் இருக்கிறது எனக்கு நெருடலா இருக்கு அதனாலதான் இப்படி ஒரு முடிவு எடுத்து இருக்கிறேன் என சொல்கிறார்.

இதற்கு ஜீவாவின் அம்மா என்னால இதை ஏத்துக்க முடியாது என்னுடைய பிள்ளையை என்கிட்ட இருந்து பிரிச்சுடாதம்மா என அழுக அதற்கு என்ன மன்னிச்சிடுங்க காவியா இருக்கிற வீட்ல என்னால இருக்க முடியாது என கூறிவிட்டு பிரியா கிளம்பி விடுகிறார் இதோடு இந்த ப்ரோமோ நிறைவடைகிறது.

siragadikka-aasai

மொத்தமாக மாறி மீனாவிடம் பாசமாக நடந்துக் கொள்ளும் முத்து.! சிறகடிக்க ஆசை இந்த வாரம்..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறக்கடிக்க ஆசை சீரியலில் முத்து சொந்தமாக வைத்திருந்த காரை போலீசார் பிடித்த நிலையில் அடுத்து என்ன செய்வது என தெரியாமல் பதட்டத்தில் இருந்து. அதாவது முத்து பாட்டியின் வீட்டிற்கு சென்ற நிலையில் அங்கு மீனாவுடன் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார் மேலும் இவர்களுக்கு முதலிரவு ஏற்படும் செய்யப்பட்டிருந்த நிலையில் இந்த நேரத்தில் முத்துவால் அசிங்கப்பட்ட வட்டிக்காரன் எப்படியாவது முத்துவை பழிவாங்க வேண்டும் என்பதற்காக முத்து காரை ஓட்டி வந்த நபரிடம் திராட்சை பழம் எனக்கூறி சரக்குகளை அனுப்பி விடுகிறார்.

இதனால் போலீசாரம் அந்த காரை பிடித்து விடுகின்றனர். எனவே இதனால் மீனா முத்து இந்த விஷயம் தெரிந்த உடன் மீண்டும் வீட்டிற்கு வர பிறகு அந்த கார் கிடைக்காமல் போய்விடுகிறது எனவே முத்து மறுபடியும் வாடகை கார் ஒன்றை ஓட்ட ஆரம்பித்திருக்கிறார். மேலும் இதற்காக சாப்பிடுவதற்கு கூட முத்துவின் அம்மா குத்தி காட்டி வருகிறார்.

முத்து மீனாவிடம் நான் வாடகை காரை தான் முதலில் ஒட்டிக்கிட்டு இருந்த பாட்டி கொடுத்த பணத்தை வைத்து சொந்தமாக கார் வாங்கினேன் ஆனால் தற்பொழுது மீண்டும் வாடகை கார் ஓட்டும் அளவிற்கு ஆயிடுச்சு என வருத்தப்பட மீனா கவலைப்படாதீங்க சரியாயிடும் மறுபடியும் அந்த கார் நம்ம கிட்ட வந்துடும் என சமாதானப்படுத்துகிறார்.

இதற்கு முத்து நாம ஊருக்கு போகாமல் இருந்தால் எந்த பிரச்சனையும் வந்திருக்காது என சொல்ல இப்படி பிரச்சனை இருக்கும் பொழுது உங்களுக்கு இப்படியெல்லாம் யோசிக்க தான் தோணும் அதையெல்லாம் விடுங்க என கூறி சமாதானப்படுத்துகிறார். இதனை அடுத்து தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் அலாரம் அடிக்க உடனே எழுந்து முத்து மீனாவை எழுப்புகிறார்.

என்னாச்சு என கேட்க நீ எழுந்திருச்சு வாசல் தலுச்சி கோலம் போட்ட பிறகுதான் தொழிலுக்கு போகணுமா அப்பதான் நல்லா இருக்கும்னு சொல்லி இருக்காரு என அவசர அவசரமாக எழுப்பப்பட்டு முத்துவே  தண்ணி தெளிக்கிறார். பிறகு மீனா கோலம் போட லேட்டாயிடுச்சு நானே போடுற என சொல்லிவிட்டு முத்து கோல போட்டு விட்டு செல்ல இதனை எல்லாம் பார்த்து மீனா மகிழ்ச்சி அடைகிறார் இதனை பார்த்த மீனாவின் அப்பா உன்னுடைய முகத்தில் சிரிப்பை பார்க்கும் பொழுது மகிழ்ச்சியாக இருப்பதாக கூறுகிறார்.

pandiyan-stores

லஞ்சம் வாங்கி மாட்டிக்கொண்ட கண்ணன்.! டிவியில் பார்த்து அதிர்ச்சியடைந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் இந்த வார ப்ரோமோ..

Pandian Stores 10th to 15th July 2023 – Promo : விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில் தொடர்ந்து பல திருப்பங்களுடன் மிகவும் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. இந்நிலையில் தனத்திற்கு பிரஸ்ட் கேன்சர் இரண்டாவது ஸ்டேஜில் இருந்து வரும் நிலையில் இதனைப் பற்றி தன்னுடைய குடும்பத்தினர்களிடம் சொல்லாமல் இருந்து வருகிறார்.

எனவே சமீபத்தில் ஐஸ்வர்யா கண்ணனின் வளையகாப்பு நிகழ்ச்சி மிகவும் கோலாகலமாக நடைபெற்று முடிந்திருக்கும் நிலையில் இதற்கு முன்பு ஐஸ்வர்யாவின் வளைய காப்பிற்காக கஸ்தூரியிடம் கடன் வாங்கி இருந்தனர் எனவே கண்ணன் ஐஸ்வர்யா இதனை பற்றி வீட்டில் இருப்பவர்களிடம் சொல்ல கூடாது என்பதில் உறுதியாக இருந்து வந்தார்கள்.

இந்நிலையில் கண்ணன் கஸ்தூரிக்கு தரவேண்டிய பணத்தை தர வேண்டும் என்பதற்காக ஐஸ்வர்யாவிடம் பணத்தை கொடுத்த நிலையில் ஐஸ்வர்யாவும் கஸ்தூரியை வர சொல்லி பணத்தை கொடுக்கிறார். இதனை முல்லை ஒட்டி கேட்டு விட பிறகு தனத்திடம் நான் சொன்னேன்ல அக்கா கஸ்தூரி அக்கா கிட்ட இவங்க ஏதோ கடன் வாங்கி இருக்காங்கன்னு நினைக்கிறேன் கத்த கத்தையா ஐஸ்வர்யா பணம் கொடுக்கிறா என சொல்லி விடுகிறார்.

கஸ்தூரியும் கிளம்ப தனம் கஸ்தூரியிடம் பணத்தைப் பற்றி கேட்க ஆமாம் வளைகாப்புக்காக வட்டிக்கு பணம் வாங்கியதாக கூற அதிர்ச்சடைகின்றனர் கண்ணனுக்கு தெரியுமா என கேட்க அவனுக்கு தெரியாமலையா என சொல்ல பிறகு இருவரும் மாட்டிக் கொள்கிறார்கள்.

இந்நிலையில் தற்பொழுது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் மேலதிகாரி கண்ணனிடம் அழைத்து லஞ்சம் வாங்கினியா என கேட்க ஆமாம் மேடம் சாரி என்ன கூறிவிட்டு கண்ணன் சென்று விடுகிறார். உடனே அவர் லஞ்சமா வாங்குற உன்னை நான் பார்த்துக்கிறேன் என கூறிவிட்டு கண்ணன் இடத்தில் கத்தையாக பணத்தை வைத்து விடுகிறார். பிறகு புதிய ஆபீசர்கள் வந்து கண்ணனின் இடத்தை செக் பண்ண அதில் பணம் இருப்பது தெரிய வருகிறது எனவே கண்ணனை அரெஸ்ட் செய்து அழைத்து செல்ல இது நியூசிலும் வருகிறது எனவே இதனை பார்த்த குடும்பத்தினர்கள் அதிர்ச்சடைகின்றனர்.