lala

நடனம் ஆடுவதில் சாண்டியை ஓரம்கட்டிய லாலா.! புலிக்குப் பிறந்தது பூனையாகுமா எனக்கூறும் ரசிகர்கள்

தற்பொழுது கொரோனாவின் இரண்டாவது அலை மிகவும் வேகமாக பரவி வருவதால் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. எனவே அனைத்து தொழில்களும் முடங்கியுள்ள நிலையில் படப்பிடிப்புகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே திரை பிரபலங்கள் அனைவரும் தங்களது குடும்பத்துடன் மிகவும் மகிழ்ச்சியாக இருந்து வருகிறார்கள்.

அந்த வகையில் தற்பொழுது சோசியல் மீடியாவில் மிகவும் ட்ரெண்டிங்காக இருந்து வருபவர் தான் டான்ஸ் மாஸ்டர் மற்றும் நடிகருமான சாண்டி. பிரபல டான்ஸ் மாஸ்டரான இவர் சில திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.  அதோடு டான்ஸ் நிகழ்ச்சிகள் பலவற்றிலும் நடுவராக பணியாற்றி வந்தார்.

இவ்வாறு பிரபலமடைந்த இவருக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் சீசன் 3 இல் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இவர் எந்த அளவிற்கு பிரபலமடைந்தாரோ அதே அளவிற்கு இவரின் மகளான  லாலாவும் ஒட்டு மொத்த ரசிகர்களின் மனதையும் வெகுவாக கவர்ந்தார்.

டான்ஸ் மாஸ்டர் சாண்டி முதலில் பிரபல நடிகையான காஜல் பசுபதியை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.  ஆனால் இவர்களின் திருமண பந்தம் நீண்ட நாள் நீடிக்கவில்லை எனவே விவாகரத்து பெற்றுக் கொண்ட சாண்டி இரண்டாவது முறையாக சில்வியா என்ற பெண்ணை 2018ஆம் ஆண்டு   காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

santi
santi

அதன் பிறகு ஒரு வருடம் கழித்து தான் லாலாவும் பிறந்தார். இந்நிலையில் லாலாவிற்க்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூலம் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உருவாகி உள்ளது.  இந்நிலையில் சாண்டி மற்றும் லாலா இருவரும் விஜயின் தெறி பாடல் ஒன்றுக்கு நடனமாடிய உள்ளவர்கள்.  எனவே இதனைப் பார்த்த ரசிகர்கள் புலிக்குப் பிறந்தது பூனையாகுமா என கூறி வருகிறார்கள்.இதோ அந்த வீடியோ.

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.