விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அந்த வகையில் எதிர்பாராதவிதமாக உலகம் முழுவதும் தற்போது பிரபலமடைந்துள்ள ரியாலிட்டி ஷோ தான் குக் வித் கோமாளி. இந்நிகழ்ச்சி சமையல் நிகழ்ச்சியாக இருந்தாலும் ரசிகர்களை கவரும் வகையில் ஏராளமான காமெடி நிறைந்ததாக இருப்பதால் இதற்கு தொடர்ந்து ரசிகர்கள் தங்களது ஆதரவை தெரிவித்து வருகிறார்கள்.
இவ்வாறு இந்நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த ஏராளமானோருக்கு திரைப்படங்களில் நடிக்கும் அளவிற்கு வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. இரண்டு சீசன்களில் வெற்றிகரமாக முடிந்த நிலையில் மூன்றாவது சீசனும் அமோக வரவேற்பை பெற்று ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் இந்த சீசனில் ரோஷினி மற்றும் ஸ்ருதிகா, ரேஸ் அக்கா உள்ளிட்ட இன்னும் தொடர்ந்து பல பிரபலங்கள் இணைந்துள்ளார்கள்.
இவர் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியாகிய பீஸ்ட் திரைப்படத்தில் இடம் பெற்றிருந்த ஜாலியோ ஜிம்கானா பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது இப்பாடலை விஜய் தனது சொந்த குரலில் பாடியதால் மிகப்பெரிய ஹிட்டடித்தது. இவ்வாறு ரசிகர்கள் மத்தியில் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும் திரைப்படம் கலவை விமர்சனத்தை தான் பெற்றுள்ளது.
அதோடு மட்டுமல்லாமல் ஏராளமான திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என அனைவரும் இந்த பாடலுக்கு நடனமாடி வீடியோக்களை வெளியிட்டிருந்தார்கள் இப்படிப்பட்ட நிலையில் ரோஸ்னி மற்றும் ஸ்ருதிகா இருவரும் இந்த பாடலுக்கு நடனமாடி வீடியோவை வெளியிட்டு உள்ளார்கள். இதோ அந்த வீடியோ.
https://twitter.com/ShrutikaOffI/status/1517141029723729931?s=20&t=pdDBHASutxVFf0asO3tOBQ