ram-sedhu

ராமர் பாலத்தை பற்றி உருவாகியுள்ள அக்ஷயகுமாரின் ‘ராம் சேது’ படத்தின் டீசர் இதோ.!

பாலிவுட்டில் முன்னணி நடிகராக பலம் வந்து கொண்டிருக்கும் அக்ஷய் குமார் தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து மிகவும் பிஸியாக இருந்து வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் தற்போது இவர் ராம் சேது என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில் இந்த திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வெளியாக இருக்கிறது.

மேலும் இந்த படம் உலகம் முழுவதும் உள்ள ஏராளமான திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் தற்போது இந்த படத்தின் தமிழ் டீசர் வெளியாகி இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த டீசரை பார்க்கும் பொழுது இலங்கைக்கும் தமிழுக்கும் இடையே உள்ள ராமர் பாலம் குறித்த கதை அம்சம் கொண்ட இந்த படம் திரில்லர் கதைய அம்சத்துடன் உருவாகியுள்ளது.

மேலும் ஒவ்வொரு காட்சியும் அடுத்தடுத்து என்ன நடக்கிறது என்ற எதிர்பார்ப்பை கிளப்புகிறது. எனவே இந்த டீசர் தமிழ் ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டியுள்ளது மேலும் இந்த படம் தமிழைத் தொடர்ந்து ஆங்கிலத்தில் ஆடம் பிரிட்ஜ் என்றும் புராண காலத்தில் இருந்து ராமர் பாலம் என்று கூறப்பட்டு வரும் இந்த பாலம் குறித்த உண்மை தன்மையை ஆராய செல்லும் ஒரு தொல்பொருள் ஆய்வாளரின் கதைதான் இந்த படத்தின் கதை அம்சம் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படிப்பட்ட நிலையில் இந்த திரைப்படத்தில் நடிகர் அக்ஷய்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க மேலும் ஜாக்குலின் பெர்னாண்டஸ் உள்ளிட்ட இன்னும் பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள் இவ்வாறு மிகவும் பிரம்மாண்டமாக அதிகப்படியான பொருட்ச அளவில் உருவாகியுள்ள இந்த படத்தினை லைகா நிறுவனத்துடன் இணைந்து இன்னும் மூன்று நிறுவனங்கள் தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.