ரஜினி பட பாடலை பாடி ரொமான்ஸ் செய்த தனுஷ், ஐஸ்வர்யா.! ரசிகர்களை வெகுவாக கவர்ந்த வீடியோ இதோ.

சினிமா உலகில் முன்னணி இடத்தை பிடிக்க மிக சுலபமான வழி தொடர் ஹிட் படங்களை கொடுப்பதோடு அவரது நடிப்பு அனைவரையும் கவரும் வகையில் இருந்தால் அந்த இடத்தை எப்பொழுது  வேண்டுமானாலும் கைபற்றி விடலாம் என்பதற்கு உதாரணமாக கூற வேண்டுமென்றால் தனுஷை கூறலாம்.

தனுஷ் சமீபகாலமாக இளம் இயக்குனர்களுக்கு நல்லதொரு வாய்ப்புகளை வழங்கி வருவதோடு அந்த திரைப்படங்கள் ஒவ்வொன்றும் அதிரிபுதிரி ஹிட் அடித்ததால் தற்போது தமிழ்நாட்டையும் தாண்டி உலக அளவில் பேசும் நபராக மாறி உள்ளார் அதற்கு காரணம் அவரது தொடர் வெற்றி என்றே கூறப்படுகிறது மேலும் தனது படங்களுக்காக அசாதாரணமான நடிப்பை வெளிப்படுத்துகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் கர்ணன் திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பை பெற்றதை தொடர்ந்து  அடுத்த அடுத்த அந்த எந்தெந்த இயக்குனரின் படங்களில் நடிக்க போகிறோம் என்பதுவரை பக்காவா ப்ளான் பண்ணி தனது நடிப்பை வெளிப்படுத்துகிறார்.

மாரி செல்வராஜ் தனுஷ் கூட்டணி கர்ணன் படம் நல்லதொரு வெற்றி பெற்றதை தொடர்ந்து அடுத்ததாக இரண்டாவது முறையும் இணைய உள்ளது இதற்காக மாரிசெல்வராஜ் தற்போது கதையை ரெடி செய்ய ரெடியாக ஆயத்தமாகி உள்ளார். கர்ணன் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அவரது ஹோலிவுட் கிரேசி மேன், சீரியஸ் ஒன்றிலும் தனுஷ் நடிக்கிறார்.

இதற்காக அவர் அமெரிக்காவிலேயே தங்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான் ஆனால் அங்கு பொழுதுபோக்கிற்காக தனது குடும்பத்துடன் ஹோட்டல், மால் என சுற்றி வருவதோடு அவ்வப்பொழுது தனது மனைவியுடன் இணைந்து பொழுதையும் கழித்து வருகிறார்.

அந்த வகையில் படப்பிடிப்பு ஓய்வு நேரம் போக குடும்பத்துடன் சேர்ந்து  ரஜினி நடிப்பில் வெளியான பேட்டை படத்தில் இடம் பெற்ற இலமை திரும்புதே என்ற பாடலை  தனுஷ் தனது மனைவிக்காக அழகாக பாடி ரொமான்ஸ் செய்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோவை நீங்களே பாருங்கள்.