pistha

காமெடி கலாட்டா நிறைந்த பிஸ்தா படத்தின் 2வது டீசர் இதோ.!

தற்பொழுது தொடர்ந்து ஏராளமான முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகி வரும் நிலையில் மெட்ரோ படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்த நடிகர் க்ரிஷ் தற்பொழுது புதிய திரைப்படம் ஒன்றில் நடித்து வருகிறார். காமடி கலாட்டா நிறைந்த இந்த திரைப்படத்திற்கு பிஸ்தா என பெயர் வைத்துள்ளார்கள் மேலும் இந்த படத்தில் மிர்துளா முரளி கதாநாயகியாக நடித்த வருகிறார்.

இவரைத் தொடர்ந்து அருந்ததி நாயகர், சதீஷ், பிரபல காமெடி நடிகர் செந்தில், யோகி பாபு போன்ற காமெடி பட்டாளமே இணைந்து நடிக்கிறது மேலும் இந்த படத்தினை எம் ரமேஷ் பாரதி எழுதி இயக்குகிறார். இவ்வாறு காமெடி கலாட்டா நிறைந்த படத்தினை ஒன் மேன் புரொடக்சன் நிறுவனத்தின் சார்பாக புவனேஸ்வரி சம்பாசிவம் தயாரிக்கிறார் எம் விஜய் ஒளிப்பதிவு செய்கிறார்.

தரன் குமார் இந்த படத்திற்கு இசையமைக்க இயக்குனர் ரமேஷ் பாரதி, யுக பாரதி, ஆர் கே விஜய் ஆகியோர்கள் பாடல் வரி எழுதியுள்ளார்கள் சமீபத்தில் தான் இந்த படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது இப்படிப்பட்ட நிலையில் தற்போது இந்த படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது.

அந்த டீசரில் கல்யாணமாகும் மாப்பிள்ளை பெண் யார் என தெரியாமலேயே திருமணத்திற்கு தயாராகிறார் மேலும் அனைவரும் அந்த மணப்பெண்ணிற்காக மிகவும் ஆர்வமுடன் காத்து வருகிறார்கள் இவ்வாறு இந்த டீச்சரை பார்க்கும்பொழுது முழுக்க முழுக்க காமெடி படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

pistha movie

மணப்பெண் யார் என்று தெரியாமலேயே திருமணத்திற்கு தயாரான மாப்பிள்ளை.! காமெடி கலாட்டா நிறைந்த பிஸ்தா படத்தின் டிரைலர் இதோ..

ரமேஷ் பாரதி இயக்கத்தில் சிரிஷ் சரவணன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் பிஸ்தா. மெட்ரோ பிளட் மணி போன்ற திரைப்படங்களில், நடித்ததன் மூலம் பிரபலமடைந்தவர் தான் நடிகர் சிரிஷ் சரவணன். பிஸ்தா படத்தில் அருந்ததி நாயர், சதீஷ், யோகி பாபு மற்றும் காமெடி நடிகர் செந்தில் நடிப்பில் மிகவும் கலாட்டா திரைப்படமாக உருவாகியுள்ளது.

அக்டோபர் 7ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்று வருகிறது. மேலும் இந்த படம் ஒட்டுமொத்த காமெடி கதாபாத்திரங்களும் இணைந்து நடித்துள்ள நிலை யில் முழுக்க முழுக்க காமெடி கலாட்டாவாக உருவாகி இருக்கிறது அதனை டைலரின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

இந்த டிரைலரின் ஆரம்பத்தில் கும்பகோணத்தில் ஓர் அகத்திய திருமணமொன்று ஆரம்பிக்கும் இந்த ட்ரெய்லரில் கல்யாணப் பெண் யார் என்று தெரியாமலேயே ஒரு மாப்பிள்ளை ஊர்வலம் செய்கிறார். அதனை தொடர்ந்து திருமணத்திற்கு வைக்கும் பேனரில் தொடங்கி பல இடங்களிலும் திருமண பெண் முகம் மட்டும் மறைத்து காட்டப்படுகிறது எனவே அந்த திருமண பெண் யார் என தெரிந்து கொள்வதில் இந்த படத்தின் ஆவலை தூண்டபடுகிறது. மேலும் காமெடி நடிகர் செந்தில் நடித்திருப்பது மிகப்பெரிய எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இவர்களைத் தொடர்ந்து இந்த காலத்திற்கு ஏற்றார் போல் சதீஷ் மற்றும் யோகி பாபுவின் காமெடி ரசிக்கும் வகையில் இருக்கிறது. மேலும் இறுதியில் கவுண்டமணியின் காமெடியான பிஸ்தா மந்திரி, பருப்பு போன்ற வசனங்களுடன் ட்ரைலர் முடிகிறது.