பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடிகர் நெல்லை சிவா சூட்டிங் ஸ்பாட்டில் கடைசியாக சிரித்து ஆடிய வீடியோ!! வைரலாகும் வீடியோ.

காமெடி நடிகர் விவேக்கின் இழப்பினை தொடர்ந்து மீண்டும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய ஒரு இழப்பு நெல்லை சிவா. இவர் 1985ஆம் ஆண்டு பாவம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு காமெடி நடிகராக அறிமுகமானார்.

இதனை தொடர்ந்து விஜய் உட்பட தற்போது முன்னணி நடிகர்களாக வலம் வந்து கொண்டிருக்கும் பலர் திரைப்படங்களிலும் தொடர்ந்து நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். அந்தவகையில் நெல்லை சிவா தற்பொழுது வரையிலும் 500க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து சாதனை படைத்துள்ளார்.

இவ்வாறு புகழின் உச்சத்தில் இருந்து வந்த இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாரடைப்பின் காரணமாக உயிரிழந்தார்.  அந்த வகையில் இவரின் மரணம் ரசிகர்கள், திரைப்பிரபலங்கள் என்று அனைவர் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இவர் வெள்ளித்திரையில் பிரபலம் அடைந்து விட்டோம் என்பதற்காக சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் மிகவும் ஆக்டிவாக நடித்து வந்தார். இந்த நிலையில் தான் இவருக்கு ஃபுட் பாய்சன் ஆய்வு உள்ளது.

எனவே இதனை சாதாரணமாக விட்ட நெல்லை சிவா திடீரென்று அடுத்த நாளே நெஞ்சிவலி ஏற்பட்டு உயிரிழந்து விட்டார். இந்நிலையில் கடைசியாக மிகவும் சுறுசுறுப்பாக காமெடியாக பாட்டு பாடி நடனமாடிய  வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். தற்போது அந்த வீடியோ இணையதளத்தில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.