varalakshmi

அஜித்தின் மங்காத்தாவை மிஞ்சும் வரலட்சுமி சரத்குமாரின் சேசிங் ஆக்சன் காட்சிகள்!! வைரலாகும் ட்ரைலர். !! வீடியோ இதோ.

varalakshmi sarathkumar chasing movie trailer released by bharathi raja:பொதுவாக நடிகைகள் என்றால் ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் மட்டுமே நடிக்க விரும்புவார்கள். ஆனால் யாரும் எதிர்பாராத வண்ணம் தனது ஒவ்வொரு படத்திலும்  வித்தியாசமான கதாபாத்திரத்தினைத் தேர்ந்தெடுத்து நடிப்பதன் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருபவர் நடிகை வரலட்சுமி சரத்குமார்.

இந்த நிலையில் தற்போது இவர் நடித்திருக்கும் சேசிங் திரைப்படத்தின் டிரைலரை இயக்குனர் பாரதிராஜா அவர்கள் வெளியிட்டுள்ளார். இந்த திரைப்படத்தை இயக்குனர் கே வீரா குமார் இயக்கியுள்ளார்.

மேலும் இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தமிழ் புத்தாண்டிற்கு வெளியானது. அது மட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் மலேசியாவில் எடுக்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

இந்த திரைப்படத்திற்காக நடிகை வரலட்சுமி அவர்கள் சூப்பர் சுப்புராயன் மாஸ்டருடன் இணைந்து ஆக்சன் காட்சிகளில் நடித்து மிரட்டி உள்ளார் என தெரியவருகிறது. இந்த திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது எனப் படக்குழு அறிவித்துள்ளது.

இதோ அந்த டிரைலர் வீடியோ.

https://youtu.be/3tTvuOlAbMQ