தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் ஜெயம் ரவி.இவர் நடிப்பில் கடைசியாக கடந்த வருடம் கோமாளி திரைப்படம் வெளிவந்து மாபெரும் வெற்றியைப் பெற்றது. இத்திரைப்படத்தை அறிமுக இயக்குநரான பிரதீப் ரங்கநாதன் என்பவர் இயக்கியிருந்தார்.
வித்தியாசமான கதை உள்ள இத்திரைப்படத்தில் நடிகை காஜல் அகர்வால் ஜெயம்ரவிக்கு ஜோடியாக நடித்திருந்தார். இவரை தொடர்ந்து காமெடி நடிகர் யோகிபாபு கேஎஸ்.ரவிகுமார் உள்ளிட்ட பல நட்சத்திரங்களும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்கள்.
இவ்வாறு பிரபலமடைந்த இத்திரைப்படம் தியேட்டரில் 100 நாட்கள் வரை ஓடி மிகப்பெரிய வெற்றியை பெற்றது அந்த வகையில் இத்திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தவர் நடிகை சம்யுத்தா ஹெக்டே. இப்படத்தில் இவர் துணை நடிகையாக நடித்து இருந்தார்.
இதன் மூலம் ரசிகர்கள் மனதை கொள்ளையடித்த இவர் தற்பொழுது வருண் ஹீரோவாக நடித்துள்ள பப்பி என்ற படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். இத்திரைப்படத்தில் தொடர்ந்து இன்னும் சில திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். தற்பொழுது சம்யுக்தா ஹெக்டே லாக் டவுன் என்பதால் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் இவர் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியிடுவது, டான்ஸ் மற்றும் ஒர்க் அவுட் செய்யும் வீடியோக்கள் பதிவிடுவது போன்றவற்றை செய்து மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
இந்நிலையில் இவருக்கும் கொரோனா பாதிக்கப்பட்டிருந்தது தற்பொழுது தான் அதிலிருந்து மீண்டு வந்துள்ளார். இந்நிலையில் தற்போது ALT பாலாஜி தளத்தில் நடித்துள்ள சீரியலின் டீசர் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த டீஸர்.