சீரியலில் நடிப்பதற்காக ரீல் ஜோடிகளாக அறிமுகமான பல நடிகர், நடிகைகள் ரியலாக திருமணம் செய்து கொண்டவர்கள் பலர் உள்ளார்கள். அந்த வகையில் இருவர்தான் சமீரா மற்றும் அன்வர் சிங் இவர்கள் பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பகல் நிலவு சீரியல் ரீல் ஜோடிகளாக நடித்து வந்தார்கள்.
இதன் மூலம் இவர்களுக்கு இடையே காதல் மலர்ந்ததால் இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்கள். பகல் நிலவு சீரியல் இருக்க பிறகு சமீரா ரெக்க கட்டி பறக்குது மனசு சீரியலில் கதாநாயகியாக நடித்து வந்தார். அதே சீரியலில் அன்வர் சிங் சிறப்பு தோற்றத்தில் நடித்து வந்தார்.
இந்த சீரியளுக்கு பிறகு இவர்கள் இருவரும் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை சீரியலில் இருவரும் ஒன்றாக போட்டியாளர்கள் கலந்துகொண்டார்கள். இவர்கள் தமிழ் மட்டுமல்லாமல் மற்ற மொழி சீரியல்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தற்பொழுது சமீரா கர்ப்பமாக இருக்கிறார் இருந்தாலும் அதனை பெரிதாக பொருட்படுத்தாமல் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிடுவது என மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
அந்தவகையில் தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை மிகவும் வேகமாக பரவி வருவதால் தொடர்ந்து பலரும் கொரோனா தடுப்பூசியை போட்டு வருகிறார்கள். அந்தவகையில் சமீரா தனது கணவருடன் மருத்துவமனைக்குச் சென்று கொரோனா தடுப்பூசி போட்டு உள்ளார்கள். சமீராவிற்கு தடுப்பூசி போடுவதை பார்த்து அன்வர் சிங் இறுக்கமாக பிடித்துக்கொண்டு குழந்தைபோல் பார்த்தபோதும் வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.