GODFATHER

சிரஞ்சீவி-நயன்தாரா நடிக்கும் ‘காட்பாதர்’ திரைப்படத்தின் டீஸர் இதோ.!

தொடர்ந்து தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை நயன்தாரா தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து மிகவும் பிசியாக இருந்து வருகிறார்.மேலும் சமீபத்தில் இவர் இயக்குனர் விக்னேஷ் சிவன் அவர்களை ஆறு வருடங்களாக காதலித்து  திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு வெளிநாடுகளில் சுற்றி வந்த இவர் தற்பொழுது தொடர்ந்து திரைப்படங்களில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறார். அதோடு மட்டுமல்லாமல் கடைசியாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா மற்றும் சமந்தா, விஜய் சேதுபதி ஆகியவர்கள் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் காத்து வாக்குல ரெண்டு காதல்.

இந்த திரைப்படத்தினை தொடர்ந்து O2 திரைப்படத்தில் நடித்திருந்தார். இரண்டு திரைப்படங்களும் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றினை பெற்றது. மேலும் இதனை தொடர்ந்து பல திரைப்படங்கள் நடித்து பிசியாக இருந்து தற்போது திரைப்படங்கள் இயக்குவதிலும் கவனம் செலுத்தி வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் நடிகர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் வெளிநாடுகளில் ஊர் சுற்றி வருகிறார்கள்.

மேலும் இவர்கள் ரொமான்டிக்காக எடுக்கும் புகைப்படங்களும் இணையதளத்தில் வைரலாகி வருகிறது இந்நிலையில் நடிகை நயன்தாரா மலையாளத்தில் முன்னணி இயக்குனரான மோகன் ராஜ் இயக்கத்தில் காட்பாதர் என்ற திரைப்படத்தில் நடித்து வந்தார்.

இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் தற்போது டீசர் வெளியாகி உள்ளது மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் மலையாள முன்னணி நடிகர் சிரஞ்சீவி நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.