aadhi

புதிய உத்வேகத்துடன் உருவாகும் ஹிப் ஹாப் ஆதியின் “அன்பறிவு” திரைப்படம்.. ஷூட்டிங் பார்ட்டில் எடுக்கப்பட்ட வீடியோ இதோ..

சினிமாவில் சமீபகாலமாக புதுமுக நடிகர் நடிகைகள் எப்படி வருகிறார்களோ  அதுபோல இசையமைப்பாளரும் காலடி எடுத்து வைத்து தனது திறமையின் மூலம் ஜொலித்துக் கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் அனிருத், ஹிப் ஹாப் ஆதி முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசை அமைத்து வருகின்றனர் அதிலும் குறிப்பாக ஹிப்ஹாப் ஆதி இசை அமைப்பத்தோடு மற்றும் நிறுத்திக்கொள்ளாமல் இயக்குனராகவும், நடிகராகவும் தன்னை சினிமா உலகிற்கு அறிமுகப்படுத்தி தற்போது சிறப்பாக பயணித்து வருகிறார்.

இவர் நடிப்பில் வெளியான மீசையமுறுக்கு நட்பே துணை போன்ற படங்கள் இவருக்கு நல்லதொரு வரவேற்பு கொடுத்தது இருப்பினும் இவர் கடைசியாக நடித்த நான் சிரித்தால் படம் சற்று தோல்வியை தழுவியது.

இதைத்தொடர்ந்து தற்போது அன்பறிவு என்ற புதிய திரைப்படத்தில் தற்போது நடிக்க தொடங்கியுள்ளார்.

இப்படத்தின் ஷட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட வீடியோ தற்போது சமூக வலைதளப் பக்கத்தில் கொண்டாடப்படுகிறது. இந்த படத்திற்காக புதிய கெட்டப்பில் வலம் வருகிறார். ஹிப்ஹாப் ஆதி இதோ நீங்களே பாருங்கள்.