தளபதி 65 திரைப்படத்தில் புதிதாக இணையும் பிரபல மலையாள நடிகர் யார் தெரியுமா அது.?

0

தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக வளம் வருபவர் இளைய தளபதி விஜய் இவரை வைத்து எப்பொழுது திரைப்படம் எடுக்கலாம் என பல இயக்குனர்கள் வரிசையில் காத்துக் கொண்டிருக்கிறார்கள் ஆனால் விஜய் தனது திரைப்படம் இப்படித்தான் இருக்க வேண்டும் என ஒரு இயக்குனரை தேர்வு செய்தால் அந்த திரைப்படம் கண்டிப்பாக ஹிட் அடித்து விடும் என்பது தெரிந்ததுதான்.

அந்தவகையில் இளையதளபதி விஜய் தனது 65வது திரைப்படத்தை இயக்க இயக்குனர் நெல்சன் அவருக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார் மேலும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார்.

இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் தான் ஜார்ஜியா நாட்டில் நடந்து முடிந்தது அப்பொழுது விஜய் ஜார்ஜியா நாட்டில் இருந்து சென்னைக்கு திரும்பி விமான நிலையத்தில் இருந்து வரும் புகைப்படங்கள் கூட வெளியானது.

விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்து வருகிறார் ஆனால் பூஜா இந்தத் திரைப்படத்திற்காக அதிக கோடி சம்பளம் கேட்கிறார் என கடந்த சில நாட்களாகவே தகவல்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

thalapathi 65
thalapathi 65

இந்நிலையில் தளபதி 65 திரைப்படத்தில் புதிதாக ஒரு பிரபலம் இணைய உள்ளாராம் யார் அந்த பிரபலம் என்று கேட்டால் வேறு யாருமில்லை பிரபல மலையாள நடிகராக வலம் வரும் ஷைன் டாம் சாக்கோ இவர் தளபதி65 திரைப்படத்தில் இணைய உள்ளதாக தகவல் இணையதளத்தில் வெளியாகியுள்ளது ஆனால் இதனைப் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவருமா என்பதை இன்னும் உறுதிப்படுத்தவில்லை.