இனி டி20 போட்டி ட்ரா ஆனால் சூப்பர் ஓவரில் இப்படி ஒரு விதிமுறையா ஐசிசி அதிரடி அறிவிப்பு.! இதுவும் நல்லாத்தான் இருக்கு

கடந்த வருடம் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியின் இறுதிப்போட்டி சமனில் முடிந்தது அதனால் அங்கு சூப்பர் ஓவர் முறையைக் கடைப் பிடித்தார்கள். அந்த ஓவரில் போட்டி சமன் செய்யப் பட்டதால் அதிக பவுண்டரிகள் அடித்த ஆணி எது என்று பார்த்து அவர்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இதனால் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் இந்த ஐசிசி விதிகள் மீது கடுமையான விமர்சனங்களை வைத்தார்கள். அதனால் இந்த முறையை மாற்ற முடிவு செய்து அதனை மறுபரிசீலனை செய்ய ஆரம்பித்தார்கள் ஐசிசி.இந்த புதிய விதிமுறைகள் தென் ஆப்பிரிக்கா இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா ஆஸ்திரேலியா தொடர்களில் அறிமுகப்படுத்த இருக்கிறார்கள்.

அதன்படி புதிய விதிமுறையாக டி20 கிரிக்கெட் போட்டியில் ஆடும் ஆட்டம் சமனில் முடிந்தால் சூப்பர் ஓவர் கடைபிடிக்கப்படும். அந்த சூப்பர் ஓவர்ரும் சமனில்  முடிந்தால் முடிவு கிடைக்கும் வரை சூப்பர் ஓவர் வீசப்படும். அதேபோல் சூப்பர் ஓவரில் 2 விக்கெட்டுகள் விழுந்தால் அணி இன்னிங்ஸ் முடிந்து விடும். அது மட்டுமில்லாமல் ஒவ்வொரு அணிக்கும் தலா ஒரு review வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல் ஆட்டம் சமனில் முடிந்தால் சூப்பர் ஓவர் நடைபெறும்போது மழை பெய்தால் நீண்டநேரம் போட்டி நடத்த முடியாத வாய்ப்பு இருப்பின் போட்டி கைவிடப்படும். மேலும் போட்டியில் இரண்டாவதாக பேட்டிங் செய்த அணியை சுப்பர் ஓவரில் முதலில் பேட்டிங் செய்யும் அதே போல் கடைசி ஓவரில் பீல்டர் கட்டுப்பாடு எவ்வாறு இருந்ததோ அதேபோல் சூப்பர் ஓவரில் பீல்டர் அவ்வாறு நிறுத்தப்பட வேண்டும் என ஐசிசி தெரிவித்துள்ளது.

Leave a Comment

Exit mobile version