T 20 போட்டியை நிறுத்திய பிசிசிஐ.! அட பாவம்பா இந்த அணி வீரர்கள்

0
cricket
cricket

ஜிம்பாப்வேயுடன் விளையாட இருந்த T20 தொடர்போட்டி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அதிரடியாக கூறியுள்ளது.

இந்திய அணி வருகின்ற ஆகஸ்ட் மாதம் வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் மோத இருக்கிறது, இதில் 3 டி20 போட்டிகளிலும், 5 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலும், 2 டெஸ்ட் போட்டிகளிலும் மோதவிருக்கின்றன, இந்த போட்டிக்கான வீரர்களின் பட்டியலை பிசிசிஐ அதிகாரபூர்வமாக அறிவித்து இருந்தது.

வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் மோதிய பிறகு அடுத்ததாக தென் ஆப்பிரிக்காவுடன் இந்திய அணி மோதும், தென்னாபிரிக்காவுடன் மோதிய பிறகு இந்திய அணி வங்கதேசத்துடன் போதும், இந்த போட்டிகள் எல்லாம் முடிவடைந்த பிறகு அடுத்ததாக ஜனவரி மாதத்தில் 3 டி20 போட்டிகளில் ஜிம்பாப்வே அணியுடன் மோத இருக்கிறது.

இந்தியா-ஜிம்பாப்வே மோத இருக்கும் t20 அட்டவணை ஏற்கனவே வெளியிடப்பட்டது, ஆனால் icc விதிமுறையை மீறி ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியம் அரசியல் தலையீடுகள் அதிகமாக இருந்ததால் தற்காலிகமாக தடை விதித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் ஜிம்பாப்வேவை ஐசிசி உறுப்பினர்கள் பட்டியலில் இருந்து தூக்கியுள்ளது, மேலும் இனி அவர்களுக்கு கொடுக்கப்படும் நன்கொடையும் நிறுத்தப்படுகிறது எனக் கூறியுள்ளது.

அதனால் இந்தியா மற்றும் ஜிம்பாப்வே போட்டி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது, ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால் அறிவிக்க பட்ட பட்டியலின்படி போட்டி நடைபெறும் என பிசிசிஐ கூறியுள்ளது, இதற்கான மாற்று ஏற்பாடுகள் வருகின்ற அக்டோபர் பின்னர் பிசிசிஐ வெளியிடும் எனத் தெரிகிறது.