நீச்சல் குளத்தில் தனது மகனுடன் சௌந்தர்யா ரஜினிகாந்த்.! சர்ச்சையை சந்தித்த புகைப்படம்

0
soundarya
soundarya

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் இவர் தயாரிப்பாளராகவும் இயக்குனராகவும் இருக்கிறார், கடந்த வருடம் விசாகன் என்பவரை திருமணம் செய்துகொண்டு தற்பொழுது திருமண வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார், மேலும் இவர் பொன்னியின் செல்வன் என்ற நாவலை வெப் சீரியலாக எடுக்க முயற்சி செய்து வருகிறார், விரைவில் இதற்கான பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, இந்த நிலையில் இவர் எப்பொழுதும் சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருப்பார், சமீபத்தில் கூட இவர் தனது மகன் புகைப்படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

soundarya_rajinikanth
soundarya_rajinikanth

அந்த புகைப்படத்தில் சௌந்தர்யாவின் மகன் ரஜினியின் ஸ்டைலில் நின்று கொண்டிருந்தார் இந்த புகைப்படம் ரசிகர்களிடம் அதிக லைக்ஸ் பெற்று வந்தது, அது மட்டுமில்லாமல் பல ரசிகர்கள் தாத்தாவையே ஓரங்கட்டும் அளவிற்கு செம லுக் எனக் கூறினார்கள், இந்த நிலையில் தற்போது தனது மகன் நீச்சல் பழகி வரும் புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார், மேலும் இளம் வயதிலேயே குழந்தைகளுக்கு நீச்சல் கற்றுத்தர வேண்டும் எனவும் நீச்சல் ஒவ்வொரு வரும் பழகி  கொள்ள வேண்டும், அனைவருக்கும் மிக முக்கியமானது பெற்றோர்கள் குழந்தைகளை விட்டுச் செல்லாமல் அவர்களுடைய பாதுகாப்பை உறுதி செய்துவிட்டு நீச்சல் கற்றுக் கொடுக்க வேண்டும் எனக் கூறினார்.

இந்த புகைப்படத்திற்கு கடுமையான விமர்சனங்கள் எழுந்தது ஏனென்றால் சென்னையில் தண்ணீர் பற்றாக்குறை அதிகமாக இருப்பதால் இந்த புகைபடத்திற்கு  விமர்சனம் எழுந்தது இதைப் பார்த்த சௌந்தர்யா ரஜினிகாந்த் உடனே அந்த பதிவை நீக்கி விட்டார், பின்பு அவரே தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வரும் இந்த நேரத்தில் நான் பதிவிட்ட புகைப்படங்களை நீக்கி உள்ளேன் என கூறியுள்ளார் அது மட்டுமில்லாமல் குழந்தைகளுக்கு உடற்பயிற்சி செய்வதன் முக்கியத்துவத்தை கூறவே அந்த புகைப்படத்தை பதிவிட்டேன் எனக் கூறினார்.