சுசி லீக்ஸ் சுசித்ரா பிறந்தநாளை குடியும் கும்மாளாமாக கொண்டாடினார் .! வீடியோவை பார்த்து வச்சி செய்யும் ரசிகர்கள்.

suchitra
suchitra

தமிழ்சினிமாவில் முன்னணி பாடகராக வலம் வருபவர் சுசித்ரா. தமிழ் சினிமாவில் பல பாடகர்கள் சிறப்பாக வலம் வந்து கொண்டிருந்தாலும் அவர்களின் ஈடு இணையாக வலம் வந்தவர் தான் சுசித்ரா என்பது நாம் அனைவரும் அறிந்ததே. தமிழில் மட்டுமல்லாது பிற மொழிகளான மலையாளம் ,தெலுங்கு போன்ற பிற மொழி திரைப்படங்களிலும் பாடல்களைப் பாடி வருகிறார்.

இவர் இதுவரையில் சுமார் 100க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி நம்மை மகிழ்வித்த உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இப்படி சிறப்பாக வலம் வந்து கொண்டிருந்த இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு சுசித்ராவின் ட்விட்டர் பக்கத்தில் இருந்து சுசி லீக்ஸ் என்ற பெயரில் பல நடிகர்களின் பெயர்கள் கூறப்பட்டு இருந்தன அதில் தனுஷ், விஜய் டிவி டிடி, ஹன்சிகா,திரிஷா ஆகியோரின் புகைப்படங்கள் மற்றும் அந்தரங்க வீடியோக்கள் வெளியானதால் சினிமா திரை உலகமே அதிர்ந்து போயின.

இதுகுறித்து அவர் கூறியது தனது ட்விட்டர் கணக்கை யாரோ ஹேக் செய்து உள்ளனர் அதிலிருந்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டதாக கூறினார் இதன்கரணமாக அவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்து வந்தார் இந்த விவகாரம் வெடித்தால் சுசித்ராவின் கணவர் கார்த்தி அவரை விவாகரத்து செய்தார்.

இதையடுத்து அவர் அடையாறில் தற்பொழுது தனியாக வாழ்ந்து வருகிறார் சமீபத்தில் இவரின் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார் இதனை அடுத்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் மது பாட்டில்கள் அடுக்கி வைத்திருக்கும் வீடியோ ஒன்றை எடுத்து அதில் பதிவிட்டுள்ளார். சுதந்திர தின வாழ்த்துக்கள் என குறிப்பிட்டிருந்தார்.

இதைக்கண்ட பலர் நீங்க கொண்டாடுங்க குடிங்க ஷேர் ,பண்ணுங்க எதை வேணாலும் பண்ணுங்க ஆனா ஹாப்பி இண்டிபெண்டன்ஸ் டேக் போட்டுட்டு இந்த மாதிரி பண்ணி இருக்கீங்களே உங்களுக்கு சுத்தமா அறிவே இல்லையா என பலர் அவரை விமர்சித்து வருகின்றனர்.