சிம்பு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் இவர் சிறு வயதிலிருந்தே சினிமாவில் நடித்து வருகிறார், சமீபகாலமாக சிம்பு என்றாலே வம்பு என்றாகி விட்டது அந்த அளவு சிம்புவின் மீது பல குற்றச்சாட்டுக்களை வைத்தார்கள்.
இந்த நிலையில் சமீபகாலமாக சிம்புவின் நடவடிக்கை ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் என அனைவருக்கும் அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது, ஏனென்றால் சிம்பு எந்த ஒரு திரைப்படத்திலும் நடிக்காமல் உடல் எடைய அதிகரித்து கொழுக் மொழுக் என்று இறுந்தார்.
இவர் உடல் எடை அதிகரித்ததால் வயதான தோற்றத்தில் இருப்பதாக பலரும் கருத்து கூறி வந்தார்கள் இந்த நிலையில் இந்த லாக்டவுன் முறையாக பயன்படுத்திக் கொண்டு உடல் எடையை அதிரடியாகக் குறைத்து தன்னுடைய பழைய தோற்றத்திற்கு மாறியுள்ளார்.
இந்த நிலையில் சிம்பு மற்றும் சுசீந்திரன் இணையும் திரைப்படத்திற்கு ஈஸ்வரன் என பெயர் வைத்துள்ளார்கள் இதன் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது, மேலும் இந்த திரைப்படம் தமிழில் மட்டுமல்லாமல் ஹிந்தி, கன்னடம், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் வெளியாக இருக்கிறது.
ஈஸ்வரன் திரைப்படத்தில் சிம்புவிற்கு நாயகியாக நிதி அகர்வால் நடிக்கிறார், அதேபோல் தங்கையாக நந்திதா ஸ்வேதா கமிட்டாகியுள்ளார். இந்த விஜயதசமியை முன்னிட்டு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் வைரலானது இந்த நிலையல் சிம்பு இந்தத் திரைப்படத்தில் எந்த கெட்டப்பில் நடிக்கிறார் என எதிர்பார்த்த ரசிகர்களின் ஆசையை பூர்த்தி செய்தார் சிம்பு..
இந்நிலையில் சிம்பு ஈஸ்வரன் சூட்டிங் ஸ்பாட்டில் கலந்து கொண்ட புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்