சமீபகாலமாக டாப் நடிகர்களின் படங்கள் பண்டிகை நாட்களை தவிர்க்கவும் வெளியாகி மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்துகின்றனர். அப்படி அண்மையில் அஜித்தின் வலிமை, சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் ஆகிய திரைப்படங்கள் வெளிவந்து ஓடின அஜித் திரைப்படம் சுமார் 224 கோடிக்கு மேல் வசூல் செய்து ஓடிக்கொண்டிருக்கிறது.
அதன் பின் வந்த சூர்யாவின் எதற்கும் துணிந்தவன். நல்ல வரவேற்பை பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தில் சூர்யாவுடன் கை கோர்க்க பிரியங்கா அருள்மோகன், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சூரி,திவ்யா துரைசாமி , புகழ் மற்றும் பல டாப் நடிகர்,நடிகைகள் நடித்து அசத்தியிருக்கிறனர்.
இந்த திரைப்படமும் முழுக்க முழுக்க பாலியல் வன்கொடுமையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருந்தது.அதே சமயம் சில ஆக்சன் சீன்கள் சென்டிமென்ட் செய்தாலும் வைத்திருந்ததால் இந்த திரைப்படம் நல்ல விமர்சனத்தை பெற்று வந்தாலும் வசூல் ரீதியாக சற்று பின்தங்கி உள்ளது.
சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் தற்போது வரை சுமார் 37 கோடி வசூல் செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வெளிவந்த 10 நாட்களாகி போட்ட நிலையில் இவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது ரொம்ப கம்மி உண்மையை சொல்லப்போனால் சூர்யாவின் மார்க்கெட்டுக்கு தற்போது மிகப்பெரிய ஒரு வசூல் செய்து இருக்க வேண்டும்.
ஆனால் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தின் வசூல் இவ்வளவு கம்மி என்பது பலருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது. மீதி இருக்கின்ற நாட்களில் இந்த படத்தின் வசூல் அதிகரிக்க வாய்ப்பும் இல்லை இன்னும் பத்து பதினைந்து கோடியை அள்ளினால் மட்டுமே இந்த படம் தோல்வியில் படத்தில் இருந்து மீள முடியம்.