வாரணம் ஆயிரம் படத்தில் சூர்யாவின் அப்பா வேடம் உண்மையில் இயக்குனர் கௌதம் மேனனின் அப்பாவின் இன்ஸ்பிரேஷனா!!

Surya’s daddy role in Vaaranam ayiram film is actually Gautham Menon’s dad’s Inspiration: கௌதம் மேனன் இயக்கத்தில் 2008 ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் வாராணம் ஆயிரம். இத்திரைப்படத்தில் இவர் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தில் சமீரா ரெட்டி, திவ்யா மற்றும் சிம்ரன் போன்றோர் இவருக்கு ஜோடியாக நடித்திருந்தனர் என்பதை அனைவரும் அறிந்ததே.

வாரணம் ஆயிரம் திரைப்படத்தினை ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரித்துள்ளார்.  மேலும் இத்திரைப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுத் தந்தார். இந்த படத்தில் உள்ள அனைத்து பாடல்களும் பெரிய ஹிட்டானது. இத்திரைப்படத்தில் தந்தை  மகனுக்கு இடையேயான அழகான கதை சொல்லப்பட்டிருக்கும்.

இந்த படத்தில் சூர்யா, கிருஷ்ணா என்கின்ற அப்பா கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இந்த அப்பா கதாபாத்திரமானது உண்மையில் இயக்குனர் கௌதம் மேனனின் அப்பாவின் இன்ஸ்பிரேஷன் என கூறப்படுகிறது.

கௌதம் மேனனின் அப்பா இருப்பது போலவே சூர்யாவின் கிருஷ்ணா கதாபாத்திரம் உள்ளது. எனவே தற்போது கௌதம் மேனனின் தந்தை மற்றும் சூர்யாவின் புகைப்படங்கள் இணையதளத்தில்  வெளியாகி வைரலாகி வருகிறது.

இதோ  அந்த புகைப்படம்.

https://twitter.com/salmaninay/status/1259858775349100544?s=20

Leave a Comment