ICC தரவரிசை பட்டியலில் முன்னேறிய சூர்யாகுமார் யாதவ் – எத்தனாவது இடம் தெரியுமா.?

இந்திய அணி 20 ஓவர் உலகக் கோப்பை செமி பைனல் தோற்று வெளியேறியது இதனை தொடர்ந்து இந்திய அணி நியூசிலாந்து உடனான மூன்று 20 ஓவர் மற்றும் மூன்று ஒரு நாள் போட்டிகளில் விளையாட உள்ளது 20 ஓவர் போட்டி 3 – 0 என்ற கணக்கில் இந்தியா கோப்பையை கைப்பற்றியது.

அதை தொடர்ந்து தற்போது இந்திய அணி ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. முதல் போட்டி இன்று கோலாகலமாக நடந்து வருகிறது. இப்படி இருக்கின்ற நிலையில் ICC தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது இதில் சிறப்பாக விளையாடிய வீரர்கள் என் அந்த இடத்தை பிடித்து இருக்கிறார்கள் என்பது குறித்து விவரங்கள் வெளிவந்துள்ளது அது குறித்து பார்ப்போம்..

கடந்த சமீப காலமாக 20 ஓவர் போட்டிகளில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடர்ந்து ரன் மழை  போயிந்து வரும் சூர்யாகுமார் யாதவ் கடந்த நியூசிலாந்து எதிரான இரண்டாவது 20 ஓவர் போட்டியிலும் கூட 51 பந்துகளில் 111 ரன்கள் அடித்து அசத்தினார். இதன் மூலம் 32 வயதான சூர்யாகுமார் யாதவ் 895 புள்ளிகள் பெற்ற முதல் இடத்தில் இருந்தார்.

ஆனால் NZ உடனான மூன்றாவது போட்டியில் சரியாக விளையாடாமல் ஆட்டம் இருந்தார் இதனால் 5 புள்ளிகள் பறிபோனது. 890 புள்ளிகள் பெற்று தற்பொழுது முதல் இடத்தில் வகித்து வருகிறார். இவருக்கு அடுத்ததாக பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரரும் விக்கெட் கீப்பருமான  ரிஸ்வான் 836 புள்ளிகள் எடுத்து இருக்கிறார். முதலிடத்தில் இருக்கும் இரண்டாவது இடத்திற்கும் உள்ள வித்தியாசமே 54 புள்ளிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

மூன்றாவதாக நியூசிலாந்த் அணியின் தொடக்க வீரரான கான்வே 788 புள்ளிகள் பற்றி மூன்றாவது இடத்தில் இருக்கிறார் நான்காவது இடத்தில் பாபர் அசாம் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவல் தற்பொழுது இந்திய ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது. மேலும் இந்த செய்தி இணையதள பக்கத்தில் பக்கரப்பட்டு வைரலாகி வருகிறது.

 

Leave a Comment