இந்திய கிரிக்கெட் அணி சமீபகாலமாக ஆசிய கோப்பை, 20 ஓவர் உலககோப்பை போன்ற தொடர்களில் சிறப்பாக விளையாண்டாலும் கோப்பையை கைப்பற்றவில்லை.. இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட சில வீரர்கள் இந்த இரண்டு தொடரிலும் சூப்பராக விளையாண்டு அசத்தினர்.
அந்த வகையில் விராட் கோலி கடந்த 20 ஓவர் கோப்பை போட்டியில் கூட தொடர்ந்து ரன் மழை பொழிந்தார். மொத்தமாக 296 ரன்கள் அடித்து அசத்தினார். அவரை தொடர்ந்து சமீபகாலமாக மிடில் ஆர்டர்களில் சூப்பராக விளையாண்டு வரும் சூர்யா குமார் யாதவ் கடந்த 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் 236 கண்கள் எடுத்து அசதினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்களைப் போல 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் இங்கிலாந்து அணியில் ஜோஸ் பட்லர், அலெக்ஸ் ஹால்ஸ் போன்றவர்கள் பலர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினர். இப்படி 20 ஓவர் உலகக் கோப்பையில் சிறப்பாக விளையாண்ட சில வீரர்களை வைத்து ஐசிசி தனது அணியை தேர்ந்தெடுத்துள்ளது.
அதில் யார் யாரிடம் பெற்று இருக்கிறார்கள் என்பது குறித்து நாம் விலாவாரியாக பார்ப்போம். அலெக்ஸ் ஹால்ஸ், ஜோஸ் பட் லர் (கேப்டன்), விராட் கோலி, சூர்ய குமார் யாதவ், பிலிப்ஸ், ராசா, ஷதாப் கான், சாம் கரண், ஆன்ரீச் நோக்கியா, மார்க் வுட், ஷாகீன் ஷா அப்ரிடி போன்றவர்கள் இடம் பற்றுள்ளனர். இந்த அணி சிறப்பாக இருந்தாலும்..
ஐசிசி கனவு அணியில் ஒரு ஆஸ்திரேலியா வீரர் கூட இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது கிரிக்கெட் ஆர்வலர்கள் மற்றும் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.. மேலும் இந்த தகவல் இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு தற்பொழுது வைரலாகி வருகிறது.

