சூர்யா இந்த படத்திற்காக உனக்கு.. ஆஸ்கார் விருது கிடைத்திருக்க வேண்டும் – வருத்ததுடன் கூறிய பிரபல டாப் நடிகர்.! யாரு சாமி அது.

0

தமிழ் சினிமாவில் வெற்றியை நோக்கி ஓடிக் கொண்டிருக்கும் நடிகர் சூர்யா சூரரைப்போற்று திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது ஜெய் பீம், எதற்கும் துணிந்தவன் ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இதைத்தொடர்ந்து அவர் வாடிவாசல் மற்றும் அடுத்தடுத்த டாப் இயக்குனர்களின் படங்களை கைகோர்க்க உள்ளதால் தமிழ் சினிமாவில் மேலும் அசுர வளர்ச்சியை எட்டும் என கூறப்படுகிறது.

வித்தியாசமான படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் சூர்யா அத்தகைய  படங்களில் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்துவதால் அந்த திரைப்படங்கள் ஒவ்வொன்றிலும் சூர்யாவின் நடிப்பு வேற லெவல் இருந்துவந்துள்ளது அந்த வகையில் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப்போற்று திரைப்படம் ஆஸ்கருக்கு பரிந்துரையை ஆனாலும் அது ஆரம்பத்திலேயே வெளியேறியது.

இந்த நிலையில் கன்னட நடிகரான சுதீப் நான் இறுதியாக OTT –  தளத்தில் நான் கடைசியாக பார்த்த திரைப்படம் சூரரைப்போற்று திறமையான நடிப்பை சூர்யா வெளிப்படுத்தியிருந்தார் உண்மையாகச் சொல்லப்போனால் இந்த படத்திற்காக அவருக்கு ஆஸ்கர் விருது கொடுத்து இருக்க வேண்டும். நான் சந்தித்த மனிதர்களில் இவரும் ஒருவர் போலித்தனம் இல்லாதவர்.

sudeep
sudeep

சூரரைப்போற்று ஒரு ஹீரோயிசம் இல்லாத படம் கேரியரின் உச்சத்தில் இல்லாத சமயத்தில் இது போன்ற ஒரு கதையை தேர்ந்தெடுத்து நடிப்பது என்பது மிகப்பெரிய விஷயம் அதை துணிச்சலாக ஏற்று நடித்து வெற்றி பெற்றுள்ளார் அதற்கு நான் பாராட்டுகிறேன் என கூறினார். சுதீப் பங்கேற்ற வானொலி நிகழ்ச்சி ஒன்றில் சூர்யாவை பற்றி இவ்வாறு கூறினார்.