Surya 42 படத்திற்காக தன்னையே மாற்றிக் கொண்ட “சூர்யா”.. மிரட்டலான லுக்

நடிகர் சூர்யா தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு பிரபலம். இவர் சமீப காலமாக நடித்த திரைப்படங்கள் ஒவ்வொன்றும் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது மேலும் இவருடன் நடிப்பு சிறப்பாக இருந்ததால் பல்வேறு விருதுகள் தேடி வந்தன. அதேபோல பட வாய்ப்புகளும் ஏராளமாக குவிந்தன.

அதன்படி முதலாவதாக வணங்கான் படத்தில் பாலாவுடன் கைகோர்த்து நடித்து வந்தார் இடையில் பாலாவுக்கும்,  சூர்யாவுக்கும் இடையே பிரச்சனைகள் பெருசாக வெடிக்க படம் டிராப்பானது. உடனே சிறுத்தை சிவா உடன் முதல் முறையாக கூட்டணி அமைத்து தனது 42வது திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படம் வரலாற்று கதையாக உருவாகி வருகிறது.

இதில் சூர்யா மாஸான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் அவருடன் இணைந்து திஷா பதானி ஹீரோயின்னாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் பல முன்னணி நடிகர், நடிகைகள்  நடித்து வருகின்றனர். அதே சமயம் சூர்யா 42படம் பல மொழிகளில் வெளியாக இருக்கிறது. இதனால் சூர்யாவின் மார்க்கெட் அசுர வளர்ச்சியை தொடும் என சொல்லப்படுகிறது.

இந்த படம் பெரிய படம் என்பதால் சூர்யா தன் உடம்பை ரொம்ப வருத்தி கொண்டு நடித்து வருகிறார். ஏன் அண்மையில் கூட படத்திற்காக ஜிம் ஒர்க் அவுட் செய்து வந்தார் அதன் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் பெரிய அளவில் வைரலானது தற்பொழுதும் சூர்யா 42 படத்திற்காக தன்னை முற்றிலுமாக மாற்றி ஒரு புதிய கேட்டப்பில் அவதாரம் எடுத்திருக்கிறார்.

அந்த புகைப்படங்கள் தற்பொழுது சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது இதை பார்த்த ரசிகர்கள் சூர்யா 42 படத்திற்காக இப்படியா.? எனக் கூறி ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர். மேலும் இந்த படம் உங்களுக்கு நிச்சயம் மிகப்பெரிய ஒரு வெற்றியை பதிவு செய்யும் என கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Leave a Comment