பணத்தை வாரி வாரி இறைக்கும் சூர்யா.! அதுவும் விளம்பரத்திற்காக காரணம் இந்த நடிகர்தான்.!

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவர், ஆனால் சூர்யா சில காலங்களாக தொடர் தோல்வியை சந்தித்து வருகிறார், என்னதான் இவர் நடித்த திரைப்படங்கள் ஹிட் என்றாலும் பாக்ஸ் ஆபீஸில் அடி வாங்கியது அனைவருக்கும் தெரிந்ததுதான்.

அதனால் சூர்யா தற்பொழுது அடுத்தப் திரைப்படங்களில் கூட கமிட் ஆகாமல் சூரரை போற்று திரைப்படத்தை எப்படியாவது வெற்றி பெற செய்ய வேண்டும் என படு மும்முரமாக வேலை செய்து வருகிறார், இவர் தற்பொழுது படத்தின் புரமோஷன் வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறார் அதற்காக படத்தின் பட்ஜெட்டை விட அதிக தொகையை புரமோஷனுக்காக செலவு செய்து வருகிறார்.

சமீபத்தில்கூட நடுவானத்தில் சூரரைப்போற்று படத்தின் வெய்யோன் சில்லி என்ற பாடலை வெளியிட்டார்கள். இது ரசிகர்களிடம் வைரல் ஆகியது ஆனாலும் இன்னும் சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படத்திற்கு ப்ரோமோஷன் தேவைப்படுகிறது ஏனென்றால் விஜய் நடிப்பில் வெளியாக உள்ள மாஸ்டர் திரைப்படத்துடன் இந்த படம் மோத இருக்கிறது.

இதற்குமுன் விஜய்யின் பிகில் திரைப்படத்துடன் கைதி  திரைப்படம் மோதி வெற்றி பெற்றது ஆனால் கைதி திரைப்படத்தின் வசூலை விட பிகில் திரைப்படத்தின் வசூல் அதிகம் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான், இந்த நிலையில் தற்பொழுது மாஸ்டர் திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவதால் மாஸ்டர் திரைப்படம் மாபெரும் வெற்றித் திரைப்படமாக அமையும் என கூறுகிறார்கள்.

அப்படியிருக்க சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படத்திற்கு பலமடங்கு புரமோஷன் தேவைப்படுகிறது, ஆனால் விஜய்யின் கடந்த சில திரைப்படங்களுக்கு அரசியல் ரீதியாக பிரமோஷன் கிடைத்துவிடுவதால், சூரரைப்போற்று திரைப்படத்தின் புரமோஷன் பல மடங்கு இருக்க வேண்டும் என்பது பலரின் கருத்தாக இருக்கிறது,.

மாஸ்டர் திரைப்படத்தின் சிங்கிள் டிராக் வெளியானதும் இதற்கு முன் வெளியிடப்பட்ட சூரரைப்போற்று அப்டேட் தடம் தெரியாமல் மறைந்தது, அதனால் சூர்யா சூரரைப்போற்று திரைப்படத்தில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறார், ஒரு காலகட்டத்தில் சூர்யா பல நடிகர்களுக்கு டப் கொடுத்தவர் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். அதனால் கண்டிப்பாக வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கிறார்கள் ரசிகர்கள்.

Leave a Comment