சூர்யாவுக்கே பட்டையை போட்ட அண்ணாச்சி.! அடேங்கப்பா ஒரே நைட்லா உலக ஃபேமஸ் அகிடுவிங்க போல…

ஹீரோவாக பிரபலமாகி வரும் அண்ணாச்சி இதுவரை தனது கடை விளம்பரங்களுக்காக மட்டுமே ஹீரோயின்களுடன் நடித்து வந்தார். இதை தொடர்ந்து இவர் வித்தியாசமான ரோலில் நடித்து ஹீரோயினாக அறிமுகமாகிறார் இந்த திரைப்படத்தில் விவேக் கடைசியாக நடித்துள்ளதால் இந்த படத்தின் மீது ரசிகர்கள் அனைவரும் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.

இந்நிலையில் தி லெஜன்ட் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளாக மோசலோ மோசலு என்ற பாடல் ஒரு மாதத்திற்கு முன்பே வெளியிடப்பட்டுள்ளது. இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல ரீச் கிடைத்து வந்தது. இதனைத் தொடர்ந்து இரண்டாவது சிங்கிளை படக்குழு வெளியிட உள்ளது. இது வாடிவாசல் எனத் துவங்கும் செகண்ட் சிங்கிள் மே 20ஆம் தேதி வெளியிடப்பட உள்ளதாக அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

எனவே வாடிவாசல் என்ற ஹேஸ்டேக் உருவாக்கப்பட்டு பேக் செய்யப்பட்டுள்ளது. ஆனால் திடீரென சூர்யா ரசிகர்கள் ஹேக்ஸ்டேக்கை பார்த்ததும் இது சூர்யா நடிக்கும் வாடிவாசல் படத்திற்கான து என நினைத்து ரீட்வீட் செய்து டேக் செய்தும் வருகிறார்கள். இதைப் பார்த்த எல்லோரும் ஆச்சரியம் தெரிவித்து வருகிறார்கள் அண்ணாச்சி படத்திற்கு எதிராக சூர்யா ரசிகர்கள் எதற்காக இத்தனை ஆர்வம் காட்டி வருகிறார்கள் என்று கேள்வி கேட்டுக்கொண்டு வருகின்றனர்.

annachi

இந்நிலையில் வாடிவாசல் என்ற ஹேஸ்டேக்கை பார்த்ததும் சூர்யா ரசிகர்கள் இவ்வளவு குஷியாக ஷேர் செய்து வருகிறார்கள். என்றால் வாடிவாசல் படம் பற்றிய அப்டேட் வந்தால் எந்த அளவிற்கு கொண்டாடுவார்கள் என கேட்டு வருகிறார்கள். ரசிகர்கள் சூர்யாவிற்க்கு எவ்வளவு ஆதரவு கொடுத்து வருகிறார்கள் என்று நெட்டிசன்கள் கேட்டு வருகிறார்கள்.

இதைத் தொடர்ந்து சூர்யா ரசிகர்களின் ஆர்வத்துக்கு ஒரு அளவே இல்லையா என கிண்டல் செய்து வருகிறார்கள். ஏற்கனவே கமலின் விக்ரம் திரைப்படத்தில் சூர்யா நடிப்பதாக உள்ள தகவல் ஒன்று சோஷியல் மீடியாவில் முழுவதும் பரபரப்பாக பேசப்படுகிறது. இதில் மீடியா முழுவதுமாக விக்ரம் படம் பற்றிய பேச்சாக தான் உள்ளது.

vaadivasal

 

Leave a Comment

Exit mobile version