சூர்யாவை ஓரங்கட்டிய ஜெயம் ரவியின் கோமாளி.! என்ன இப்படி ஆகிடுச்சு

0
comali
comali

அறிமுக இயக்குநர் பிரதீப் இயக்கத்தில் ஜெயம் ரவி காஜல் அகர்வால் சமந்தா ஆகியோர் நடிப்பில் வெளியாகி திரைப்படம் கோமாளி, இந்த திரைப்படத்தில் காமெடி நடிகராக யோகி பாபு நடித்திருந்தார், வேல்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா இசையமைத்திருந்தார்.

கோமாளி திரைப்படம் வெளியாகி சில வாரங்கள் ஆகியும் இன்னும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது, இந்த திரைப்படம் வெளியாகி மூன்று வாரங்கள் கடந்தும் தமிழகத்தில் மட்டும் 34 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது. இந்த வசூல் சூர்யாவின் என் ஜி கே திரைப்படத்தை விட அதிகமாகும்.

அதேபோல் கோமாளி திரைப்படம் இதற்கு முன் ஜெயம் ரவி நடித்த தனி ஒருவன் திரைப்படத்தின் வசூலை முறியடிக்க சில கோடிகள் தான் வேணுமாம், கண்டிப்பாக அந்த வசூலை முறியடிக்கும் என தெரிகிறது. இந்த வசூல் இந்த வருட டாப் 5 படங்களில் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது.

கடந்த சில வருடங்களாகவே மிகப்பெரிய ஹிட் கொடுக்க வேண்டுமென காத்துக்கொண்டிருக்கிறார் சூர்யா, ஆனால் ஜெயம் ரவியின் திரைப்படம் சூர்யாவின் படத்தை விட அதிக வசூல் செய்துள்ளதால் சூர்யாவின் மார்க்கெட் கேள்விக் குறியாகியுள்ளது.

சூர்யாவின் அடுத்த திரைப்படம் கண்டிப்பாக மிகப்பெரிய ஹிட் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.