20 ஓவர் பார்மேட்டில் புதிய சாதனை படைத்த சூர்யா குமார் யாதவ்..! என்னன்னு தெரிஞ்சா நீங்களே ஷாக்காவீங்க..

ஐபிஎல் மூலம் தனது திறமையை வளர்த்துக் கொண்டு பின் இந்திய அணியில் இடம் பிடித்து வருகின்றனர் அந்த வகையில் சில வருடங்களுக்கு முன்பு இந்திய அணியில் இடம் பிடித்தவர் தான் சூர்யா குமார் யாதவ். இவர் இந்திய அணியில் காலடி எடுத்து வைத்ததிலிருந்து எப்பொழுது வரையிலும் ஒவ்வொரு போட்டியிடுமே எடுத்தவுடனேயே அதிரடியை காட்டி அசத்தி வருகிறார்.

அதன் காரணமாக தொடர்ந்து ரன் மழை பொழிவதால் ரசிகர்கள் இவரது ஆட்டத்தை பார்த்து கொண்டாடி வருகின்றனர் எந்த பார்மட்டாக இருந்தாலும் எடுத்த உடனே அடிப்பதுதான் அவரது ஸ்டைலும் கூட அப்படிதான் கடந்த 20 உலக கோப்பையிலும் சூப்பரான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

அதனைத் தொடர்ந்து இந்தியா – நியூசிலாந்து இரண்டாவது 20 ஓவர் போட்டியில் இன்று கோலாகலமாக நடந்தது. முதலில் டாஷ் வென்ற இந்திய அணி ஆரம்பத்தில் சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் சூர்யா குமார் யாதவ் வந்த பிறகு நியூசிலாந்து பவுலர்களை நாலாபக்கமும் அடித்து சிதறவிட்டார் 32 பந்துகளில் 50 அடித்த இவர் பிறகு 17 பந்துகளில் 50 ரன்கள் அடித்து அசத்தினார்.

ஒட்டுமொத்தமாக  51 பந்துகளில் இவர் 111 ரன்கள் குவித்தார் என்பது  குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் இந்திய அணி ஒட்டுமொத்தமாக 191 ரன்கள் எடுத்தன. சூர்யா குமார் யாதவ் இந்த வருடத்தில் இரண்டு சதம் அடித்த வீரர் என்ற பெருமையை அவர் பெற்றிருக்கிறார் மேலும் இரண்டு சதங்கள் அடித்ததன் மூலம் மற்றொரு வீரரை சமன் செய்திருக்கிறார்.

இதுவரை 20 ஓவர் ஃபார்மட்டில் ஒரே ஆண்டில் இரண்டு தடவை சதம் அடித்தவர் ரோகித் சர்மா தற்போது அந்த சாதனையை இவர் சமன் செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. நாளுக்கு நாள் சூர்யா குமார் யாதவ் ஆட்டம் வேற லெவலில் போய்க்கொண்டே இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment