தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா இவர் நடிப்பில் அடுத்தடுத்து மூன்று திரைப்படங்கள் வெளியாக இருக்கின்றன அந்த வகையில் சூர்யாவின் ரசிகர்கள் பலரும் ஆர்ஜே பாலாஜி இயக்கும் திரைப்படத்தின் மீதுதான்.
சூர்யா நடிப்பில் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த திரைப்படம் கருப்பு. ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் உருவான இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து அனைவருமே எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால் படத்தின் ஓடிடி, சாட்டிலைட் என படத்திற்கு வியாபாரம் ஆகாததால் ரிலீஸ் தேதியில் இருந்து பின்வாங்கியது.
ஒரு வழியாக இந்தப் படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனப் இப்போது வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது. சாட்டிலைட் உரிமையை ஜீ நிறுவனம் வாங்கியிருப்பதாக சொல்லப்படுகிறது. அதனால் ரிலீஸ் தேதி ஏப்ரல் என்றிருந்த நிலையில் மார்ச் 19 என லாக் செய்திருக்கிறது.