தனது வளைகாப்பை கோலாகலமாக கொண்டாடிய சூர்யா கார்த்தி பட நடிகை.!

நடிகை பிராணிதா சுபாஷ் இவர் தமிழ்,தெலுங்கு,மற்றும் கன்னட போன்ற  திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் வெளியான அனைத்து திரைப்படங்களும் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்தது.

அதேபோல் தமிழில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம்தான் ‘மாஸ்’ அந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில்  நடித்திருப்பார். அதுமட்டுமில்லாமல் நடிகர் கார்த்தி கூட சகுனி என்ற திரைப்படத்திலும் நடித்திருப்பார்.

மேலும் அவருக்கு பெரிய அளவில் தமிழில் திரைப்பட வாய்ப்பு அமையவில்லை அதனால் அவர் பார்வை மற்ற மொழிகளுக்கு திரும்பியது. மேலும் இவருக்கு சென்ற ஆண்டு மே மாதம் பிரஜித் என்பவருடன் திருமணம் நடந்தது.

சமீபத்தில் அவரது கணவரின் 34வது  பிறந்தநாளில் அவர் கர்ப்பமாக இருப்பதாக அறிக்கையை அறிவித்த நிலையில் ரசிகர்கள் அனைவருமே இணையதளத்தில் வாழ்த்துக்கள்  கூறிவருகிறார்கள். மேலும் தற்போது நடிகை  பிரணிதாவுக்கு  வளைகாப்பு விழா நடைபெற்றது.

அந்த  வளைகாப்பில் எடுக்கப்பட்ட அழகான புகைப்படங்களை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.அதை பார்த்த ரசிகர்கள் அனைவருமே லைக் மற்றும் கமெண்ட் ஷேர் செய்து வருகிறார்கள்.

Pranitha Subhash
Pranitha Subhash

Leave a Comment